Husband Kills Wife: மனைவி கழுத்தறுத்து கொலை.. கணவர் போலீஸில் சரண்..!
மைசூரில் வாலிபர் ஒருவர் தான் காதலித்து திருமணம் செய்த மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 06, மைசூர் (Karnataka News): கர்நாடக மாநிலம், மைசூரை (Mysore)சேர்ந்த தம்பதி மனு - ஸ்ருதி. இவர்கள் இருவரும் 5 ஆண்டுகளுக்கு முன் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இதனையடுத்து, இருவருக்குமிடையே அடிக்கடி (Family Dispute) சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், டிசம்பர் 03-ஆம் தேதி இரவு தம்பதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. Child Abuse: 7 மாத பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை.. நடைபாதையில் விட்டுச் சென்ற அவலம்..!
இதனால் ஆத்திரத்தில் இருந்த கணவர், நேற்று முன்தினம் (டிசம்பர் 04)காலையில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை (Murder) செய்துள்ளார். இதனையடுத்து, காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அங்கு அவர் அளித்த தகவலின்படி, அவர்களின் வீட்டுக்கு சென்ற காவல்துறையினர், ஸ்ருதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஸ்ருதியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அவரை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.