ஏப்ரல் 25, சென்னை (Chennai News): தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 3,935 பணியிடங்களுக்கான இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும், குரூப் 4 தேர்வு தேதி குறித்த விவரங்களை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. 40 அடி உயர கரண்ட் வயரில் காத்திருந்த எமன்.. கூலித் தொழிலாளர்களுக்கு சர்ச்சில் நடந்த பயங்கரம்.!
தேர்வு நாள்:
2025, ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும்.
விண்ணப்பிக்கும் நாள்:
இன்று (25-04-2025) முதல் மே மாதம் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிப்பது எப்படி?
இன்று முதல் மே மாதம் 24ம் தேதி வரை, www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ தேர்வாணைய இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.