ஏப்ரல் 25, திசையன்விளை (Tirunelveli News Today): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை, மகாதேவன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரத். இவரின் மனைவி பிருந்தா. தம்பதிகளுக்கு 2 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறார். வெளியூரில் சரத் வேலை பார்த்து வரும் நிலையில், வீட்டில் இருந்த பிருந்தாவுக்கும், அதே பகுதியில் வசித்து வரும் நபர்களுடன் பிருந்தா பழகி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பிருந்தாவின் வீட்டுக்கு வந்த 2 பேருடன் பிருந்தா குழந்தையோடு சென்றுள்ளார். திசையன்விளை நெடுஞ்சாலை பாலத்தில் உள்ள பகுதியில் பிருந்தா முத்து என்பவரோடு தனிமையில் இருந்துள்ளார். அப்போது, அவரின் குழந்திங் தாயை தேடி அழுதுள்ளது. அச்சமயம் அங்கு இந்த முத்துவின் நண்பர் லிங்கம் குழந்தையை தூக்கிச் சென்றார். மயோனைஸ் விற்பனைக்கு அதிரடி தடை.. அரசு கூறும் காரணங்கள் என்ன? விபரம் இதோ..!
உதட்டில் காயம்:
பின் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் குழந்தை உயிரிழந்துவிட்டது என லிங்கம் பிருந்தாவிடமே குழந்தையை ஒப்படைத்து இருக்கிறார். அதனைத்தொடர்ந்து, குழந்தையுடன் பிருந்தா சாத்தான்குளம், சண்முகபுரத்தில் வசித்து வரும் தாயின் வீட்டுக்கு சென்றுள்ளார். பின் குழந்தை கட்டிலில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக தாயிடம் நாடகமாடிய பிருந்தா திசையன்விளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது சிறுமியின் உதட்டில் காயம் இருப்பதை கவனித்தனர். இதனால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேரில் வந்த அதிகாரிகள் முதற்கட்டமாக பிருந்தாவிடம் விசாரணை செய்தனர். அப்போது, பிருந்தாவுக்கு பலருடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் குழந்தை பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி இருந்ததா? அல்லது என்ன காரணம்? என விசாரணை நடக்கிறது. மேலும், குழந்தையை தூக்கிச் சென்ற லிங்கம், அவரின் நண்பர் முத்துவை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.