டிசம்பர் 05, கொல்கத்தா (West Bengal News): மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் (Kolkata) நடைபாதையில் உள்ள வீட்டின் முன்பு 7 மாத குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்துள்ளது. இந்த சத்தம் கேட்டு அருகில் வந்து பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் புர்டோல்லா காவல்துறையினருக்கு புகார் அளித்தார். Family Murder: குடும்பத்தைக் கொன்று நாடகமாடிய மகன்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!
புகாரின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த குழந்தையை மீட்டு, பெற்றோரின் அனுமதியுடன் பரிசோதனை செய்வதற்காக ஆர்ஜிகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் பிறப்புறுப்பில் காயங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அந்த குழந்தையின் உடலில் பல கீறல்கள் இருந்துள்ளன. இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதன் முதற்கட்ட விசாரணையில், 7 மாத குழந்தையை நடைபாதையில் இருந்து எங்கோ தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை (Sexual Abuse)செய்துவிட்டு மீண்டும் நடைபாதைக்கே கொண்டு விட்டுவிட்டனர் என்பது தெரியவந்துள்ளது. அப்பகுதியில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஏழு மாத குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.