Car Truck Accident: லாரியின் மீது கார் மோதி பயங்கர விபத்து; 2 காவலர்கள் பரிதாப பலி.! டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்.!

கண்ணிமைக்கும் நேரத்தில் கார் லாரியின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Delhi Car Accident Cops Death (Photo Credit: @ANI X)

ஜனவரி 09, டெல்லி (New Delhi): டெல்லியில் உள்ள ஹரியானா மாநிலத்தின் சோனிபட் (Sonipat Accident Cops Died) எல்லைப்பகுதியில், நேற்று இரவு 11:30 மணியளவில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவிட்டு, தங்களின் கார்களில் பயணம் செய்துள்ளனர். அப்போது, இவர்களின் வாகனம் குண்டலி எல்லைப்பகுதியில் டிரக் மீது மோதி விபத்திற்குள்ளானது.

காரின் முன்பக்கம் நொறுங்கி விபத்து: இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 காவலர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காவல் துறையினர் பயணித்த வாகனத்தின் முன்பகுதி நொறுங்கிப்போனது. விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், மீட்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த காவலர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். Wife Killed by Husband: கடல் நீரில் மூழ்கடித்து மனைவி கொலை: சுயஉதவி குழுவில் கடன் வாங்கியதால் கணவன் வெறிச்செயல்.! 7 மாதம் கழித்து அம்பலமானது உண்மை.! 

2 காவல் ஆய்வாளர்கள் பலி: மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து எப்படி நடந்தது? என்ற விசாரணை நடைபெறுகிறது. முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த இருவரும் காவல் ஆய்வாளர்கள் தினேஷ் பெனிவால் மற்றும் ஆதர்ஷ் நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ரன்வீர் என்பது உறுதியானது.

காரணம் என்ன?: சாலையில் சென்றுகொண்டு இருந்த கனகர லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதும், லாரியின் பின்னால் வந்த கார் லாரியின் மீது மோதியுள்ளது. மோதிய வேகத்தில் வாகனத்தில் சிறிய வெடிப்பு ஏற்பட்டு இருவரும் பலியாகி இருக்கின்றனர். லாரி ஓட்டுநர் தலைமறைவாகிவிட்டதால், அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement