Air India Flight AI171: ஏர் இந்திய விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன? குஜராத்தில் சோகம்.!

குஜராத் மாநிலம் (Ahmedabad Air India Flight Accident) அகமதாபாத்தில் லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கியது. விமான நிலையம் அருகிலேயே விபத்து நடந்துள்ளது.

Gujarat Accident (Photo Credit : @PTI_News X)

ஜூன் 12, அகமதாபாத் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் இன்று விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்து கரும்புகை எழும் அதிர்ச்சி காட்சிகளும் வெளியாகி உள்ளன. அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (Air India passenger aircraft) விபத்திற்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. முதியோர் இல்லத்தில் ஃபுட் பாய்சன்.. 3 பேர் மரணம்.. தென்காசியில் பரபரப்பு.! 

பயணிகளின் நிலை என்ன?

இந்த விமானத்தில் 180க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுவதால், விமான பயணிகளின் நிலை என்ன? என்பது குறித்து அவரது உறவினர்களும் பெரும் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி விபரங்கள் காத்திருக்கின்றன. விபத்து நடந்தது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விமானம் வெடித்து சிதறியதும் உறுதியாகியுள்ளது. விமானம் மேலெழும்பும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏர் இந்திய விமான விபத்து ( Air India Plane Crash )குறித்த தகவல் :

முதற்கட்ட தகவலின் படி, அகமதாபாத்தில் (Ahmedabad Flight Crash) இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட விமானம், விமான நிலையத்தில் ஓடுபாதையில் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே விபத்தில் சிக்கியுள்ளது. விமானம் மதியம் 1.17 மணிக்கு புறப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது. 242 பயணிகள் விமானத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில் அவர்களின் நிலைமை குறித்து கவலை எழுந்துள்ளது.

விமானம் விழுந்ததில் கரும்புகை எழுந்த வீடியோ ( Air India Flight AI171 Crash Video) :

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement