
ஜூன் 12, தென்காசி (Tenkasi News Today): தென்காசி மாவட்டத்தில் உள்ள சுந்தரபாண்டியபுரம், கீழபாட்டாக்குறிச்சி கிராமத்தில் அன்னை முதியோர் ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்தில் 61க்கும் மேற்பட்ட குடும்பத்தால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்றோர் தங்கியுள்ளனர். இவர்களுக்கு முதியோர் இல்லம் நிர்வாகம் சார்பில் தினமும் உணவுகளும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது. அன்னதானம் உட்பட பிற விஷயங்களுக்காக நன்கொடை வழங்குவதும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
உணவு ஒவ்வாமையால் உயிரிழப்பு :
இந்நிலையில் கடந்த ஜூன் 8-ஆம் தேதி இரவு நேரத்தில் இவர்களுக்கு சாப்பிட மாமிச உணவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உணவு ஒவ்வாமை (Food Poison) ஏற்பட்டு 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அடுத்தடுத்து தென்காசி அரசு மருத்துவமனையில் (Tenkasi Government Hospital) அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சங்கர் என்பவர் ஜூன் 8-ஆம் தேதியே பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து இன்று ஒரே நாளில் அம்பிகா, முருகாம்பாள் என்ற இரண்டு முதியவர்களும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். Anbumani Ramadoss: பாமக உட்கட்சி பிரச்சனை விவகாரம்.. அன்புமணி காரசார பேச்சு.!
11 பேர் மருத்துவமனையில் அனுமதி :
இதனால் உணவு ஒவ்வாமை (Food Poison Death) காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இந்த இறப்பு குறித்து தகவலறிந்த தென்காசி மாவட்ட மருத்துவ குழுவினர் மற்றும் காவல்துறையினர் (Tenkasi Food Poison) இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோமதி, செல்வராஜ், மீனாட்சிசுந்தரம் உட்பட 11 முதியவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சம்பவத்தன்று என்ன உணவு சாப்பிடக் கொடுக்கப்பட்டது?, எப்படி உணவு விஷமாக மாறியது? என்பது குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் தென்காசி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.