![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/images/2025/02/nashik-car-accident-5-year-old-dies-photo-credit-x-.jpg?width=380&height=214)
பிப்ரவரி 07, நாசிக் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியைச் சேர்ந்தவர் துருவ் ராஜ்புத் (வயது 5). சிறுவன் சம்பவத்தன்று அங்குள்ள பிரபலமான தனியார் விடுதிக்கு சென்று இருந்தார். பார்க்கிங்குடன் இருக்கும் கார்டன் பகுதியில் சிறுவன், தனது தந்தையுடன் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது, கார் ஒன்று பார்க்கிங் பகுதியில் வந்தது. சிறுவனின் தந்தை செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். Father Kills Daughter: மகள் இரும்பு கம்பியால் அடித்து கொடூர கொலை.. தந்தை தற்கொலை முயற்சி..!
நொடியில் நடந்த சோகம்:
அச்சமயம், சிறுவன் சற்றும் எதிர்பாராத விதமாக கார் வரும் திசை நோக்கி ஓடிவந்த நிலையில், காரின் மீது மோதி சக்கரத்தில் சிக்கினார். காரின் ஓட்டுனரும் சிறுவனின் வருகையை எதிர்பார்க்கவில்லை. இதனால் அவரால் வாகனத்தை நிறுத்த முடியவில்லை. இறுதியில் காரின் இரண்டு சக்கரமும் சிறுவனின் மீது ஏறி-இறங்கியது. இந்த விபத்தில் சிறுவன் படுகாயம் அடைந்தான். Student Dies By Suicide: தலைமை ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் விவரீத முடிவு.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
சிறுவன் மரணம்:
சிறுவனை மீட்ட விடுதி ஊழியர்கள், உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிறுவனை அனுமதி செய்தனர். அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கார் ஓட்டுனருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், விடுதி நிர்வாகம் கார்டன் & பார்க்கிங் பகுதியை ஒரே இடத்தில் அமைத்து ஏன்? எனவும் விசாரித்து வருகின்றனர். Husband Kills Wife: வாலிபருடன் கள்ளத்தொடர்பு; பலமுறை கண்டித்தும் நீடித்த உறவு.. மனைவி கழுத்து நெரித்து கொலை..!
இந்த விஷயத்தை காரணமாக வைத்து பார்க்கிங் மற்றும் கார்டன் பகுதியை மாற்றி அமைக்க வேண்டும். அதுவே எதிர்காலத்தில் இதுபோன்ற எதிர்பாராத மரணத்தை குறைக்க வழிவகை செய்யும் என சமூக ஆர்வலர்களும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்:
महाराष्ट्र के नासिक में दर्दनाक हादसा..
5 साल के बच्चे को कार ने कुचला..
बच्चे की मौके पर मौत.
नासिक के एक बड़े होटल में पीड़ित का पिता अपने दो बच्चों के साथ होटल की लॉबी में जा रहा था.
तभी अचानक बच्चा कार के सामने आया और हादसे का शिकार हो गया.
आरोपी ड्राइवर फरार. pic.twitter.com/SNT3URMjSS
— Vivek Gupta () February 7, 2025