Crime Scene File Pic (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 06, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், பெங்களூரு (Bengaluru) ரூரல் தேவனஹள்ளி அருகே விஜயபுராவை சேர்ந்தவர் நிஜாமுதீன் (வயது 35). ஆட்டோ ஓட்டுநர் ஆவார். இவரது மனைவி ரபியா (வயது 32). இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ரபியாவுக்கும், பக்கத்து வீட்டு வாலிபர் ஒருவருக்கும் இடையில் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அவரது கணவர் பலமுறை கண்டித்தும் நிறுத்தவில்லை. Road Accident: பைக் மீது பேருந்து மோதி விபத்து; 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி.. துயர சம்பவம்..!

கழுத்து நெரித்து கொலை:

இதனால், 8 மாதங்களுக்கு முன் மனைவி, பிள்ளைகளுடன் ஹொஸ்கோட் அருகே சுலிபெலே கிராமத்திற்கு நிஜாமுதீன் சென்றார். அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அங்கு ரபியாவுக்கு, சுலிபெலே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலருடனும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நிஜாமுதீன், நேற்று முன்தினம் இரவு (பிப்ரவரி 04) ரபியாவை கழுத்தை நெரித்து கொலை (Murder) செய்தார். பின், சுலிபெலே காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.