6 Year Old Girl Rape & Killed: தாயுடன் உறங்கிய 6 வயது சிறுமியை கடத்திச்சென்று கற்பழித்து கொலை; உ.பி லாரி ஓட்டுநர் அதிர்ச்சி செயல்.!
வேலைக்காக தெலுங்கானா வந்திருந்த உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர், அரிசி ஆலையில் தாயுடன் உறங்கிய 6 வயது சிறுமியை கடத்திச்சென்று கற்பழித்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
ஜூன் 14, பெத்தப்பள்ளி (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெத்தப்பள்ளி மாவட்டம், சுல்தானாபாத் மண்டலம், கட்டனப்பள்ளி பகுதியில் அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. நேற்று அரிசி ஆலையில், லோடு ஏற்ற உத்திரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் பலராம் என்பவர் வருகை தந்துள்ளார்.
தாயுடன் உறங்கிய சிறுமி கடத்தல்:
இதனிடையே, நேற்று நள்ளிரவு நேரத்தில், தொழிற்சாலை வளாகத்தில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயுடன் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். அவரை கடத்திச்சென்ற கயவன் பல்ராம், தொழிற்சாலை வளாகத்தில் உள்ள மறைவான பகுதிக்கு தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
மகளை காணாது பரிதவித்த தாய்:
இந்த துயர சம்பவம் நடந்தேறிய நிலையில், தன்னுடன் உறங்கிய மகள் காணாததை கண்டு சிறுமியின் தாய் விழித்தபோது பதறியுள்ளார். மகளை காணாததால் அங்கிருந்தவர்களிடம் உதவிகேட்க, உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலாத்காரம் & கொலை உறுதி:
நிகழ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அங்கிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தபோது சிறுமி கடத்தப்பட்டது உறுதியானது. சிறுமியின் உடலை கண்டெடுக்கும்போது, காவல் துறையினர் பலாத்காரம் மற்றும் கொலை நடந்ததை உறுதி செய்தனர். தற்போது சிறுமியின் உடல் சுல்தானாபாத் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், பலராமை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சிறுமிகளிடம் அத்துமீறும் கயவர்களின் செயல்களை குறைக்க, பலாத்கார குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்குவதே தீர்வாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.