Universal Account Number: உங்களிடம் பிஎஃப் உள்ளதா? அதில் நிறுவனம் சரியாக பணம் செலுத்துகிறதா? தெரிந்துகொள்ளுங்கள் இங்கே.!
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது இந்திய அரசின் மேற்பார்வையின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். இது EPFO ஆல் நிர்வகிக்கப்படுகிறது. தனியார் மற்றும் அரசு வேலைகளில் பணிபுரியும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் கணக்கு உள்ளது. அதனைப் பற்றி இப்பதிவில் காணலாம்.
ஜனவரி 23, புதுடெல்லி (Technology News): ஒவ்வொரு தனிநபரும் முதலீடுகள் செய்வதற்கான நோக்கங்களே எதிர்காலத்திற்கான சேமிப்பும், அவசரகால நிதி தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், ஓய்வுபெற்ற காலத்தில் நிலையான வருமானம் கிடைப்பதுவுமேயாகும். அதில் மாத வருமானம் பெறுபவர்களின் வயதான காலத்தை நிதிச் சிக்கலிலிருந்து பாதுகாப்பதற்காக சேமித்து வைத்து திட்டமாகும். இது ஒவ்வொரு மாதமும் சேமிக்கும் மாதாந்திர சேமிப்பாகும். இது பணிபுரிபவரின் சம்பளத்திலிருந்து 12% பிஎஃப் தொகையாக பிடித்தம் செய்யப்படும். மேலும் நிறுவனத்தின் சார்பில் 12 சதவீதமும் செலுத்தப்படும். இதில் 8.33% வீதம் பென்சன் திட்டத்திலும், 3.67% வருங்கால வைப்புத்திட்டத்திலும் செலுத்தப்படும். இது ஊதியத்தில் ஒரு பகுதியாக இருப்பதால் பலரும் இது பற்றி அறிந்து வைத்துதிருப்பார்கள். ஆனால் யாரும் நிறுவனம் சரியாக பணம் செலுத்துகிறதா என கண்காணிப்பதில்லை. EPFO News: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி.. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிய மைல்கல்.!
UAN பயன்பாடு:
இந்த வைப்புத் திட்ட கணக்கில் உள்ள விவரங்களைத் தெரிந்துகொள்ளவும், தொகைப் பற்றி தெரிந்துகொள்ளவும் கொடுக்கப்பட்டது தான் 12 இலக்க யு.ஏ.என். இதை ஆக்டிவேட் செய்து பணியாளர் வைப்பு நிதி கணக்கு ஆணையத்தின் இணையதளத்திலிருந்து பெறலாம். பணியாளர் எத்தனை நிறுவனங்கள் மாறினாலும் இந்த எண்கள் மாறாது. பிஎஃப் கணக்கு பற்றிய விவரங்களை எளிய முறையில் அறிந்து கொள்ள தற்போது அரசு மிஸ்டு கால் முறையை அறிவித்துள்ளத்து. 9966044425 இந்த எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுத்தால் பயனரின் பெயர், UAN எண், மற்றும் பிறந்த தேதி, ஆதாரின் முதல் 2 இலக்க எண் மற்றும் கடைசி ஐந்து இலக்கங்கள், பான் கார்டு தகவல் ஆகியவை கொடுக்கப்படும். அத்துடன் கடந்த முறை செய்த பிஎஃப் கணக்கின் பங்களிப்பின் விவரம், மொத்த பிஎஃப் வைப்புத் தொகை ஆகியவை குறுஞ்செய்தியாக வழங்கப்படுகிறது. இதற்கு பணியாளரின் தொலைபேசி எண் அவரின் UAN எண்ணுடன் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இதுவரை பதிவு செய்யதவர்களும் UAN -ன் இணையதளத்தில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)