CSK Fans Sleeping at Railway Station: மழையினால் தடைபட்ட சென்னை - குஜராத் அணிகளின் ஆட்டம்; இரயில் நிலையத்தில் உறங்கிய சென்னை அணியின் ரசிகர்கள்.!

குஜராத்துக்கு கிரிக்கெட் போட்டியை காணச்சென்ற சென்னை அணியின் ரசிகர்கள், மழை குறுக்கீட்டின் காரணமாக தங்க இடமின்றி இரயில் நிலையத்தில் உறங்கினார்கள்.

CSK Fans Sleeping at Railway Station (Photo Credit: Twitter)

மே 29, அகமதாபாத் (Gujarat News): ஐ.பி.எல் 2023 தொடரின் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் இருக்கும் நரேந்திர மோடி கிரிக்கெட் மைத்ததில் வைத்து நடைபெறுவதாக இருந்தது. ஆட்டத்தின் போது புரட்டியெடுத்த கனமழை காரணமாக, நேற்றைய ஆட்டம் தடைபட்டது.

இதனால் சென்னை சூப்பர்கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் (Chennai Super Kings Vs Gujarat Titans) அணிகள் மோதும் இறுதி விளையாட்டு போட்டி, இன்று இரவு 07:30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இன்றைய வானிலையை பொறுத்தமட்டில் அங்கு சாதகமான சூழலே நிலவுகிறது. மழைக்கு வாய்ப்பு இல்லை என்று அறிவிப்பு வந்தாலும், இயற்கையின் தீர்ப்பு இறுதியாக தீர்மானிக்கப்படும். CSK Vs GT: சென்னை – குஜராத் அணிகள் இடையே இன்றைய ஆட்டம் நடைபெறுமா?.. வருண பகவான் நினைப்பது என்ன??.. விபரம் உள்ளே..!

ஐ.பி.எல் 2023 தொடரின் இறுதி ஆட்டம் என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி, சென்னை அணியின் ரசிகர்கள் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் இருந்து ஐ.பி.எல் போட்டிகளை கண்டுகளிக்க குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகருக்கு சென்றிருந்தனர்.

நேற்று மழை ஆட்டத்தை குறுக்கிட்டதால், அவர்களின் முன்பதிவு டிக்கெட்டுகள் இன்று உபயோகம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டாலும், அவர்கள் அங்கு தங்க வழியின்றி அகமதாபாத் இரயில் நிலையம் உட்பட கிடைத்த இடங்களில் நேற்று இரவு உறங்கி தங்களின் நேரத்தை கழித்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.