NCERT Recommends Replacing India With Bharat: இந்தியாவை பாரதமாக மாற்ற பரிந்துரை; தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அதிரடி..!
இனி அச்சிடப்படும் பாடப்புத்தகங்களில் இந்தியா என்ற பெயருக்கு பதில் பாரத் என்ற பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 25, புதுடெல்லி (New Delhi): மத்தியில் (Central Govt) இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சி செய்துவரும் பாரதிய ஜனதா கட்சி (Bharatiya Janata Party), நடப்பு பாராளுமன்ற ஆயுட்காலத்தில் தற்போது அதன் இறுதிக்கட்ட ஆயுட்காலத்தினை நோக்கி நகர்ந்து வருகிறது. 2024 மே மாதம் பாராளுமன்ற தேர்தல் (2024 Parliament Election) நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இறுதியாக பல அதிரடி அறிவிப்புகள் மத்திய அரசால் (Govt Of India) வெளியிடப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இந்தியா (India) / பாரத் (Bharat) (பாரதம்) தொடர்பான பெயர் பலகைகள் குறித்த சர்ச்சைகள் எழுந்தன. மத்திய அரசு இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டன. இதற்கேற்ப காங்கிரஸ் (Congress Alliance INDIA) தலைமையிலான கூட்டணி அணிக்கு அணி INDIA என பெயரிடப்பட்டு, அவர்கள் விறுவிறுப்புடன் தேர்தல் பிரச்சாரம், ஆலோசனை கூட்டம், மாநாடுகளை நடத்தி வருகின்றனர்.
ஆனால், பாஜக (BJP Alliance) மற்றும் அதன் தலைமையிலான தேசிய கூட்டணியோ, ஜி20 (G20 Summit 2023) மாநாட்டில் இந்தியாவின் பெயர் பலகையை பாரத் என பிரதமரின் (Prime Minister) இருக்கைக்கு முன்பு வைத்து உலக நாடுகளுக்கு மட்டுமல்லாது இந்திய மக்களுக்கும் அதனை மறைமுகமாக பிரசுரப்படுத்தியது. Husband Kills Wife: நடத்தை சந்தேகத்தால் விபரீதம்; 4 குழந்தைகளின் தாயை கொடூரமாக கொன்ற கணவர்.!
இதனால் இந்தியாவா? / பாரதமா? என்ற விவாதம் இந்தியாவில் தலைதூக்கியுள்ள நிலையில், அதற்கு விரைவில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு விளக்கம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு மத்திய அமைச்சர்களும், பாஜக பிரமுகர்களும் பாரதம் (Bharat) தொடர்பான வாதங்களை பேசும்போதும் முன்வைக்கின்றனர். இந்நிலையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (The National Council of Educational Research and Training - NCERT), பள்ளிப்பாட புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற பரிந்துரை செய்துள்ளது. இதனால் புதிதாக இனி அச்சிடப்படும் பாடப்புத்தகங்களில் இந்தியா என்ற பெயருக்கு பதில் பாரத் என்ற பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)