அக்டோபர் 16, சென்னை (Health News): டீ குடிக்க கடைகளுக்குச் சென்றால், நமது கண்களில் முதலில் படுவது சமோசா, வடை போன்ற எண்ணெய் தீனிகள் தான். சுடசுட ஒருசில கடைகளில் விற்பனை செய்யப்படும்போது, அதன் வாசனையும் நம்மை சுண்டியிழுக்கும். ஒருசில ஊர்களில் விற்பனை செய்யப்படும் சமோசாக்களுக்கு சட்னி, சாம்பார் போன்ற வகைகளும் கொடுத்து வியாபாரத்தை பெருக்குகிறார்கள். யுக்தியுடன் வியாபாரத்தை பெருக்க நினைக்கும் நபர்கள், சமோசா தயாரிப்பு மற்றும் விற்பனையின்போது சுகாதார செயல்பாடுகளை சரிவர கடைபிடிப்பது இல்லை. இது சமோசாவின் தரத்தை கேள்விக்குறியாக்குகிறது. தினமும் அதனை சாப்பிட்டால் உடல்நலனுக்கு கூடுதல் பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
சுவையை எதிர்பார்த்தால் மொத்தமும் முடிந்துவிடும்:
வெளிப்புறத்தில் மொறுமொறுப்புடன் இருக்கும் சமோசா, உட்புறத்தில் வெங்காயம், உருளைக்கிழங்கு என காய்கறிகளுடன் சுவையாக இருக்கும். இதனை அடிக்கடி சாப்பிடுவது ஆபத்தை தரும். தெருவோரங்களில் சுகாதாரம் இல்லாத வகையில் தயாரிக்கப்படும் சமோசா புற்றுநோயை கூட ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும்-மீண்டும் பயன்படுத்தி பொரித்து எடுப்பது தெருவோர கடைகளில் வடை, சமோசா போன்ற உணவுகளுக்கு அதிகம் நடக்கிறது. எண்ணெயை பலமுறை சூடேற்றும்போது பிரீ ராடிக்கல், டிரான்ஸ்பேட், ஆல்டிஹைடு, பாலிசிலிக் அரோமேட்டிக் போன்ற நச்சு நிறைந்த பொருட்கள் உருவாகின்றன. Diwali Wishes 2025: 'தீபஒளி' பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவோம் - தீபாவளி 2025 வாழ்த்துக்கள்.!

DNA வரை பாதிக்கலாம்:
இந்த பொருட்களால் உடலில் வீக்கம், அழுத்தம், செல்கள் சேதமாகும் பாதிப்புகள் உண்டாகும். ஒருசில தீவிர பிரச்சனைகளால் DNA வரை மாற்றமும் உண்டாகும். உடல் பருமன், இதய நோய் அதிகரித்து புற்றுநோய்க்கு காரணமாக அமையும். அதேபோல, குறைந்த விலையில் கிடைக்கும் மறுசுழற்சி செய்யப்பட்ட எண்ணெய் DNAவை நேரடியாக பாதிக்கும். உடலுக்கு கேடான கொழுப்புகளை அதிகரித்து, இரத்த அழுத்தத்தை உயர்த்தும். இதய ஆரோக்கியம் கேள்விக்குறியாகும். நுரையீரல், மார்பக புற்றுநோயும் ஏற்படலாம்.
செய்ய வேண்டியது & செய்யக்கூடாதது என்ன?
நாம் சமையலுக்கும் சரி, கடைக்கு சென்று சாப்பிடும் இடங்களிலும் சரி. புதிய எண்ணெய் பயன்படுத்துகிறீர்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும். எண்ணெய் பயன்பாடை முடிந்தளவு குறைத்துக்கொள்ள வேண்டும். அதுவே உடல்நலனுக்கு நல்லது. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தும் செயலை தவிர்க்க வேண்டும். எண்ணெய்யில் வித்தியாசமான வாசனை இருந்தால் பயன்படுத்த வேண்டாம். சாலையோரம், கடைகளில் சாப்பிடுவதையும், ரோட்டுக்கடை தின்பண்டங்களை சாப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது.