Kanchanjungha Express Crash: பயணிகள் இரயில் மீது சரக்கு இரயில் மோதி பயங்கர விபத்து; பயணிகள் நிலை என்ன?..!
இரண்டு இரயில்கள் ஒரே வழித்தடத்தில் வந்ததாக கூறப்படும் நிலையில், அதிவிரைவு இரயிலின் இறுதிப்பெட்டிகள் மீது சரக்கு இரயில் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்ட சம்பவம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நடந்துள்ளது.
ஜூன் 17, டார்ஜிலிங் (Kolkata News): மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தா, கஞ்சன்ஜங்கா (KANCHANJUNGHA EXPRESS) அதிவிரைவு வாங்கி இன்று காலை விபத்தில் சிக்கியது. சீல்டா நோக்கி பயணம் செய்த அதிவிரைவு இரயில் மீது சரக்கு இரயில் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கி இருக்கிறது. இந்த விபத்தில் பயணிகள் இரயிலில் பயணம் செய்த பலர் காயமடைந்து இருக்கின்றனர். விபத்தில் உயிரிழந்ததாக தற்போது வரை அறிவிக்கப்படாத நிலையில், காயமடைந்தோர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த இரயில்வே அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Restrictions on Water supply: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு; வாரத்தில் 3 நாட்கள் நீர் விநியோகம் ரத்து செய்ய்யப்படுவதாக அறிவிப்பு.!
ஒரேவழித்தடத்தில் பயணித்த இரயில்கள்?
முதற்கட்ட தகவலின்படி ஜல்பாய்குரி இரயில் நிலையத்தில் இருந்து சீதாஹருக்கு புறப்படும்போது, ரங்கபாணி பகுதியில் பயணிகள் அதிவிரைவு இரயில் - சரக்கு இரயில் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. முன்னால் சென்றுகொண்டு இருந்த பயணிகள் இரயில் மீது, சரக்கு இரயில் ஒரே வழித்தடத்தில் பயணித்து மோதி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த விபத்தால் அகர்தா - கொல்கத்தா இடையே இரயில் போக்குரவத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேற்படி களநிலவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. உயிரிழப்பு குறித்து அறிவிப்பு இல்லை.
என்டிடிவி காணொளி:
ஐஏஎன்எஸ் காணொளி: