Taj Express Train Fire: டெல்லி தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து.. 2 பெட்டிகள் எரிந்து நாசம்..!

டெல்லியில் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Taj Express Train Fire (Photo Credit: @ndtv X)

ஜூன் 03, புதுடெல்லி (New Delhi): தென்கிழக்கு டெல்லியின் சரிதா விஹார் பகுதியில் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் (Taj Express) 2 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே துறை அதிகாரிகள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப்பணியிலும் ஈடுபட்டுள்ளனர். Kedar Jadhav Retirement: அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஒய்வை அறிவித்த கேதர் ஜாதவ்.. ரசிகர்கள் சோகம்..!

அதே சமயம் துக்ளகாபாத் - ஓக்லா இடையே இயக்கப்படும் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணித்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என வடக்கு ரயில்வேயின் முதன்மை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement