ஜூன் 03, புதுடெல்லி (Cricket News): மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான கேதார் ஜாதவ் (Kedar Jadhav), 2014 முதல் 2020 வரை இந்திய அணியில் விளையாடியவர். 2019 உலகக் கோப்பை தொடரிலும் விளையாடி இருக்கிறார். இவர் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர். 2018 முதல் 2020 ஐபிஎல் சீசன் வரை சிஎஸ்கே அணியில் விளையாடி இருந்தார். சென்னைக்காக அவர் ஆடியபோது மோசமான ஆட்டம் காரணமாக ரசிகர்களால் அவர் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளானார். இதனால் சென்னை அணியுமே அவரை 2020 சீசனோடு விடுவித்துவிட்டது. PM Modi Pays Tribute To Karunanidhi: கலைஞர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள்.. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்..!
2021 சீசனில் சன்ரைசர்ஸ் அணி அவரை அவரின் அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கே வாங்கியது. அங்கே கிடைத்த சில வாய்ப்புகளிலும் அவர் சரியாக பர்ஃபார்ம் செய்யவில்லை. இதனால் அங்கிருந்தும் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் கேதர் ஜாதவ், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
Thank you all For your love and support throughout my Career from 1500 hrs
Consider me as retired from all forms of cricket
— IamKedar (@JadhavKedar) June 3, 2024