Road Accident: சாலையில் தறிகெட்டு ஓடிய பேருந்து மோதி 4 பேர் பலி.. 36 பேர் படுகாயம்..!

மும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகரப் பேருந்து மோதி 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bus Accident In Mumbai (Photo Credit: @Rajmajiofficial X)

டிசம்பர் 10, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் (Mumbai) மின்சாரப் பேருந்து நேற்று (டிசம்பர் 09) இரவு 9.30 மணிக்கு குர்லாவில் புறப்பட்டு அந்தேரி மேற்கு அகர்கர் சவுக்குக்கு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து (Bus Accident) விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் மும்பை குர்லா மேற்கில் உள்ள எஸ்ஜி பார்வே மார்க் பகுதியில் அன்ஜும் இ இஸ்லாம் பள்ளி அருகே இந்த விபத்து நடந்துள்ளது. அதில், 4 பேர் மீது ஏறியதோடு 100 மீட்டர் வரை தாறுமாறாக ஓடி இரண்டு ஆட்டோக்கள், மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது ஏறியது. Teenager Murder: ரூ.100 பணத்துக்காக 22 வயது இளைஞர் கொலை; துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்..!

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், பேருந்து மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் உட்பட 4 பேர் பலியாகினர். மேலும், 36 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் கனீஷ் கத்ரி (வயது 55), அனம் ஷேக் (வயது 20), அஃப்ரீன் ஷா (வயது 19), மற்றும் சிவம் கஷ்யப் (வயது 18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, பேருந்து ஓட்டுநர் சஞ்சய் மோர் (வயது 50) கைது செய்யப்பட்டார். பேருந்தில் பிரேக் பிடிக்காததாலேயே விபத்து நடந்ததாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார். ஆனால், பேருந்து விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், ஓட்டுநர் போதையில் இருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பேருந்தை ஆய்வு செய்த ஆய்வாளர் பரத் ஜாதவும் பிரேக் சரியாக இருப்பதாகவே முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநகரப் பேருந்து விபத்து: