Train Accident: சௌராஷ்டிரா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து..!
குஜராத்தில் தாதர் - போர்பந்தர் இடையே செல்லும் சௌராஷ்டிரா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 24, சூரத் (Gujarat News): குஜராத் மாநிலம், சூரத்தில் (Surat) உள்ள கிம் ரயில் நிலையம் அருகே தாதர் - போர்பந்தர் இடையே செல்லும் சவுராஷ்டிரா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தாதர் - போர்பந்தர் சௌராஷ்டிரா எக்ஸ்பிரஸ் (Dadar-Porbandar Saurashtra Express), இன்று (டிசம்பர் 24) மதியம் குஜராத்தின் சூரத்திலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிம் நிலையத்தில் தடம் புரண்டது. இன்று மாலை 3.32 மணியளவில் ரயில் எண் 19015 போர்பந்தருக்கு செல்ல நிலையத்தில் இருந்து புறப்படும் போது பயணிகள் அல்லாத பெட்டியின் 4 சக்கரங்கள் இன்ஜினுக்கு அடுத்ததாக தடம் புரண்டது. Viral Video: நொடியில் உயிர் தப்பிய சம்பவம்.. ரயில் தண்டவாளத்திற்கு அடியில் படுத்துக்கொண்ட நபர்.., வீடியோ வைரல்..!
ரயில் தடம் புரண்டு விபத்து:
இச்சம்பவத்தில் பயணிகள், ரயில்வே ஊழியர்களுக்கு எந்தவித காயமோ அல்லது சேதமோ ஏற்படவில்லை என்று மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், கூடுதல் லூப் லைன் இருப்பதால், அந்த வழித்தடத்தில் ரயில்களின் இயக்கம் பாதிக்கப்படவில்லை என மக்கள் தொடர்பு அலுவலர் கூறினார். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.