90 ஆண்டுகளுக்குப் பின் சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

மத்திய அரசு, சுமார் 90 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது.

Union Minister Ashwini Vaishnaw (Photo Credit: YouTube)

ஏப்ரல் 30, டெல்லி (Delhi News): பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஏப்ரல் 30) டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சரவையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் எடுத்த முக்கிய முடிவுகளை டெல்லியில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (Ashwini Vaishnaw) செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். இந்தியா-பாகிஸ்தான் போர்பதற்றம்.. திடீரென ரஷ்யா செல்லும் மோடி? வெளியான தகவல்..!

சாதிவாரி கணக்கெடுப்பு:

இந்தியாவில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு (Caste Wise Population Census) கடைசியாக 1931ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன் பிறகு, 2011இல் நடத்தப்பட்ட சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பில், விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை. தற்போது, மத்திய அரசு சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது. இருப்பினும், சாதி கணக்கெடுப்பு தனித்தனியாக நடத்தப்படாது என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதி வாரியான குடிமக்களின் எண்ணிக்கையும் எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement