Husband Kills Wife: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்; மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது..!

ஒடிசாவில் கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கணவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Murder | Crime File Pic (Photo Credit: Pixabay)

டிசம்பர் 14, சுந்தர்காஹ் (Odisha News): ஒடிசா மாநிலம், சுந்தர்காஹ் (Sundergarh) மாவட்டத்தில் உள்ள ஜித்ராபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் டெபன் குமார் பெஹ்ரா (வயது 35). இவர் ஷம்யமாகி பெஹ்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 11ஆம் தேதி அன்றிரவு ஷம்யமாகி பெஹ்ரா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்து கிடந்த ஷம்யமாகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். Woman Gang Rape: இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; கோவில் திருவிழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

மனைவி படுகொலை:

இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த பெண்ணின் கணவர் டெபன் குமாரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர், மர்மநபர்கள் சிலர் கொள்ளையடிப்பதற்காக வீட்டிற்கு வந்ததாகவும், மனைவியின் நகைகளை பறிக்க முயன்றபோது அவர்கள் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை (Murder) செய்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், இவர் கூறிய வாக்குமூலம் பிரேத பரிசோதனையில் ஒத்துப்போகவில்லை. இதனையடுத்து, அவரது கணவரிடம் காவல்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

துப்பாக்கியால் சுட்டுக்கொலை:

விசாரணையில், மனைவி ஷம்யமாகியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். டெபன் குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனையறிந்த ஷம்யமாகி, கணவரை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த டெபன் குமார் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை (Shot Dead) செய்துள்ளார்.

இருவர் கைது:

இதனையடுத்து, கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதத்தை டெபன் குமாரின் மைத்துனர் சத்ய நாராயணன் மறைத்து வைத்து, கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர், உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் சத்ய நாராயணன் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.