Minor Girl Sexual Abuse: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு தர்மஅடி.. பொதுமக்கள் நீதி கேட்டு போராட்டம்..!
ஜார்க்கண்ட்டில் அங்கன்வாடியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.
டிசம்பர் 19, ராஞ்சி (Jharkhand News): ஜார்க்கண்ட் மாநிலம், சிங்பூம் (Singhbhum) மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி ஒன்று அமைந்துள்ளது. அங்கு, நேற்று முன்தினம் (டிசம்பர் 17) இரவு 7 மணியளவில் சிறுமி ஒருவர் மூச்சு பேச்சில்லாமல் கிடந்தார். இதனைக்கண்ட அவரது குடும்பத்தினர், சிறுமியை மீட்டு உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். Five Terrorists Shot Dead: ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு; தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொலை..!
சிறுமி பலி:
அங்கு சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக சம்பாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்து கொலை செய்த குற்றவாளியை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்:
சிறுமியின் உயிரிழப்பு குறித்து தகவல் அறிந்த வந்த சம்பா கிராம மக்கள், மருத்துவமனையின் முன்பு திரண்டனர். அப்போது, சிறுமியின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனிடையே, மருத்துவமனையின் முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.