Dating App Fraud: காதலியை விபச்சார தொழிலுக்கு தள்ளிய காதலன்; ‘டேட்டிங்’ ஆப்ஸ் மூலம் நேர்ந்த அவலம்..!

உத்தர பிரதேசத்தில் டேட்டிங் ஆப்ஸ் மூலம் காதலியை விபச்சார தொழிலுக்கு தள்ளிய காதலன் உட்பட 2 இளைஞர்கள், 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dating App (Photo Credit: Pixabay)

டிசம்பர் 16, நொய்டா (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், நொய்டா (Noida) நகர பிரிவு காவல்துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன் 3 இளைஞர்களையும், 2 இளம்பெண்களையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன. இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறுகையில், கைதான லாலு யாதவ் என்பவர் தனது காதலி அஞ்சலியின் உதவியுடன் 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட இளைஞர், இளம்பெண்களை குறிவைத்து பேசி பழகி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் பணம் சம்பாதிப்பதற்காக விபச்சாரத்தை (Adultery) செய்து வந்தனர். Techie Suicide: பெங்களூர் ஐடி ஊழியர் தற்கொலை விவகாரம்; மனைவி, மாமியார், மச்சான் அதிரடி கைது.!

இவர், தனது காதலியையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார். மேலும், காதலி அஞ்சலி ‘டேட்டிங்’ (Dating App) ஆப்ஸ் மூலம் வாடிக்கையாளர்களை அணுகுவார். அந்தவகையில், நொய்டாவில் வசிக்கும் இளைஞன் ஒருவர், டேட்டிங் ஆப்ஸ் மூலம் பெண் ஒருவரை அழைத்தார். அந்தப் பெண்ணும் டேட்டிங்குக் சம்மதம் தெரிவித்துவிடுகிறது. இருவரும் காரில் ஜாலியாக சுற்றிவந்தனர். அப்போது, இளைஞனுடன் ஜாலியாக இருந்த பெண் கொடுத்த தகவலின் பேரில், லாலு யாதவ் உள்ளிட்ட சிலர் காரை சுற்றிவளைத்தனர்.

பின்னர், அந்த இளைஞனிடம் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கவைத்து சிறைக்கு அனுப்புவோம் என்று அவர்கள் மிரட்டினர். ஆனால், அந்த இளைஞர் காவல்துறையிடம் தனக்கு நேர்ந்த மிரட்டல் குறித்து புகார் அளித்தார். தனது காதலியை வைத்து விபச்சார தொழிலில் (Prostitution) ஈடுபட்டு வந்த லாலு யாதவ், அவருக்கு உதவிய மேலும் 3 இளைஞர்கள், 2 இளம்பெண்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.