Wife Kills Husband: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி.. காட்டிக் கொடுத்த 5 வயது மகன்..!

உத்தர பிரதேசத்தில் தூங்கிக்கொண்டிருந்த கணவரின் தலையில் செங்கற்களை கொண்டு அடித்து கொலை செய்த வழக்கில் மனைவி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

Wife Kills Husband (Photo Credit: @TrueStoryUP X)

டிசம்பர் 16, ஷாஜஹான்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் (Shahjahanpur) மாவட்டத்தில் உள்ள தஹ் குர்த் கலா கிராமத்தைச் சேர்ந்த தம்பதி யூனுஸ் (வயது 40) - ஷமிம் பானோ. இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 13ஆம் தேதி அன்று இரவு, யூனுஸ் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அவரது மனைவி ஷமிம் பானோ மற்றும் அவரது காதலன் மனோஸ் கானும் செங்கற்களை கொண்டு தலையில் கொடூரமாக தாக்கி கொலை (Murder) செய்தனர். Dating App Fraud: காதலியை விபச்சார தொழிலுக்கு தள்ளிய காதலன்; ‘டேட்டிங்’ ஆப்ஸ் மூலம் நேர்ந்த அவலம்..!

இதுகுறித்து, அவர்களின் 5 வயது மகன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலை செய்யப்பட்டவரின் மனைவி ஷமிம் பானோ மற்றும் அவரது காதலர் மனோஸ் கான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.