Woman Nose Cut Off: நிலத்தகராறில் மூக்கை வெட்டிய நபர்.. ரத்த வெள்ளத்தில் மருத்துவமனைக்கு ஓடிய பெண்..!
ராஜஸ்தானில் நிலத் தகராறு காரணமாக பெண் ஒருவரின் மூக்கை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 19, ஜெய்ப்பூர் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் (Jalore) மாவட்டத்தை சேர்ந்த பெண் குக்கி தேவி (வயது 40). இவர், தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். கிராமத்தில் நிலம் தொடர்பாக (Land Dispute) உறவினர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், குக்கி தேவி மற்றும் அவரது மகன் நிலத்தை பார்வையிட்டனர். அப்போது, மருமகன் ஓம்பிரகாஷ் மற்றும் குக்கி தேவிக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், இருவருக்கும் அடிதடியாக மாறியது. Viral Video: ரயிலில் லேடிஸ் பெட்டியில் நிர்வாணமாக ஏறிய நபரால் பரபரப்பு.. அலரியடித்த பெண்கள்..!
பெண்ணுக்கு மூக்கறுப்பு:
அப்போது, ஓம் பிரகாஷ் கத்தியால் அவரது மூக்கை அறுத்து துண்டித்துள்ளார். வலியால் துடிதுடித்துப்போன குக்கி தேவி, துண்டிக்கப்பட்ட மூக்கை பையில் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடனே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல்சிகிச்சைக்காக ஜோத்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முதலுதவி அளித்த டாக்டர் மகேஸ்வரி கூறுகையில், மூக்கு கடுமையாக வெட்டப்பட்டு பாதிப்படைந்ததால், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மட்டுமே மீண்டும் இணைக்க முடியும் என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.