Blacky Rice: சர்க்கரை நோயாளிகளுக்கு தேவமிருதமாகும் கருப்பு அரிசி.. அசத்தல் நன்மைகள் என்னென்ன?..!
எந்த உணவை எப்போது? எப்படி? எவ்வுளவு? சாப்பிட வேண்டும் என்ற வரைமுறையின்றி மாறிப்போன நமது நடவடிக்கைகள், உடற்பயிற்சியின்மையால் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறோம்.
டிசம்பர், 9: இன்றளவில் பெரியோர், சிறியோர் வித்தியாசமின்றி பாதிப்பை ஏற்படுத்தி வரும் சர்க்கரை வியாதி (Diabetes) பிரச்சனை, நமது மாறிவிட்ட உணவுப்பழக்கம் மற்றும் கலாச்சாரத்தினால் ஏற்பட்டுள்ளது. எந்த உணவை எப்போது? எப்படி? எவ்வுளவு? சாப்பிட வேண்டும் என்ற வரைமுறையின்றி மாறிப்போன நமது நடவடிக்கைகள், உடற்பயிற்சியின்மையால் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறோம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு அரிசி உணவு என்பது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இவ்வாறானவர்களுக்கு கருப்பு அரிசி (Blacky Rice) பேருதவி செய்கிறது. டைப் 2 நீரிழிவு நோயை குறைக்கவும் உதவி செய்கிறது. இயற்கையாக நார்சத்து அதிகம் கொண்ட கருப்பு அரிசி, இரத்தத்தின் குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிட உதவி செய்யும். Selfie Smartphones: நீங்க செல்பி பிரியரா?.. அட்டகாசமான செல்பிக்கு அசத்தல் ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்..! உங்களுக்காக இதோ..!!
கருப்பு அரிசியில் இருக்கும் ஆண்டி-ஆக்சிடன்ட், புரதம், இரும்புசத்து போன்றவை அரிசி அலர்ஜி எதிர்ப்பு பண்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளன. இதனால் எடை இழப்பும் சாத்தியமாகும் வாய்ப்புகள் உள்ளன. நார்சத்து நிறைந்த கருப்பு அரிசி, உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைகிறது. இதனால் உடல் எடையும் குறைகிறது.
சர்க்கரை நோயாளிகள் இதயத்தின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளதால், கருப்பு அரிசியை அவர்கள் சாப்பிட வேண்டும். இதனால் உடல்நலம் மேம்படும். சர்க்கரை நோயாளிகள் கருப்பு அரிசியை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அளவாக சாப்பிடலாம்.