Watermelon Seed Benefits: அடேங்கப்பா.. தர்பூசணி விதையில் இருக்கும் நன்மைகள் இவ்வுளவா?.. இந்த கோடையில் தவறவிடாதீர்கள்..!

சிவந்த நிறத்துடன் கொண்ட சதைப்பகுதி சாப்பிட ருசியுடன் நீர்சத்து நிறைந்து காணப்படும்.

Template: Watermelon Seeds

டிசம்பர், 9: கோடைகாலங்களில் எளிதாக கிடைக்கும் தர்பூசணி (Watermelon) பழத்தில் 90 % நீர் உள்ளது. இதனால் அக்காலத்தில் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி சாப்பிடும் பழங்களில் தவிர்க்க இயலாத ஒன்றாக தர்பூசணி இருக்கும். சிவந்த நிறத்துடன் கொண்ட சதைப்பகுதி சாப்பிட ருசியுடன் நீர்சத்து நிறைந்து காணப்படும்.

அதன் விதைகளை (Watermelon Seeds) இன்றளவில் பலரும் சாப்பிட்டு குப்பைகளில் உமிழ்ந்து தள்ளுவது வாடிக்கையாகியுள்ளது. தர்பூசணி பழத்தின் விதையினை வறுத்து அல்லது மாவுபோல மாற்றி சாப்பிட்டால் பல நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது. உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நபர்கள், தர்ப்பூசணி விதையை சாப்பிடலாம். Bitcoin Dangerous: பிட்காயின் சாதகங்கள் என்னென்ன?.. பாதகமானது ஏன்?.. அசரவைக்கும் தகவல்கள்..! 

Watermelon

அதில் இருக்கும் மெக்னீஷியம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவி செய்யும். அதனைப்போல இதயத்தில் எல்.டி.எல் கொழுப்பு அதிகரிக்கும் போது, தமனியில் அதன் படிமங்கள் சேரும். இதனால் தமனி அடைத்து மாரடைப்பு போன்ற இதய பிரச்சனைகள் ஏற்படலாம். அதனை சரி செய்யும் மோனோ அன்சுசிரெட் & பாளி அன்சுசிரேட் அமிலங்கள் தர்பூசணி விதையில் உள்ளது.

இது இரத்தத்தில் கலந்திருக்கும் மோசமான கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுகிறது. அதனைப்போல, நோயெதிர்ப்பு சக்திக்கு எதிராக போராடவும் உதவி செய்கிறது. தர்பூசணி விதையில் இருக்கும் மெக்னீஷியம், இரும்பு, துத்தநாகம் போன்றவை வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தும். வைட்டமின் பி, வைட்டமின் சி, அமினோ அமிலங்கள் கொண்டு உடலை வலுப்படுத்தும். உடலில் ஏற்பட்டுள்ள காயங்களை விரைந்து குணப்படுத்தும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 9,2022 06:50 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).