Dragon Fruit Benefits: டிராகன் பழத்தில் இவ்வுளவு நன்மைகளா??.. பெயருக்கு ஏற்றாற்போல சத்துக்களின் டிராகன் பழம்..!
நமது உடலை உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதை போல, உடலுக்கு நன்மை வழங்கக்கூடிய இயற்கையில் கிடைக்கும் கொடைகளான பழங்களை சாப்பிட்டால் பல நோய்கள் நம்மை விட்டுச்செல்லும்.
டிசம்பர், 8: உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சர்க்கரை வியாதியை (Diabetes Medicine) கட்டுப்படுத்த பல ஆண்டுகளுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆனால், நமது உடலை உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதை போல, உடலுக்கு நன்மை வழங்கக்கூடிய இயற்கையில் கிடைக்கும் கொடைகளான பழங்களை சாப்பிட்டால் பல நோய்கள் நம்மை விட்டுச்செல்லும். இதில், சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல காய்கனிகள் இருக்கின்றன. இன்று டிராகன் பழம் (Dragon Fruit) குறித்த தகவலை நாம் தெரிந்துகொள்ளலாம்.
சர்க்கரை வியாதிக்கு முற்றுப்புள்ளி (Full stop for Diabetes): சர்க்கரை நோயினை கட்டுக்குள் வைக்கும் பழங்களில் டிராகன் பழம் முக்கியமான ஒன்றாகும். பார்ப்பதற்கு சப்பாத்தி கள்ளியின் தோற்றத்தில் இருக்கும் டிராகன் பழம், கற்றாழை குடும்பத்தை சேர்ந்தது ஆகும். இது கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம். அடர்ந்த சிவப்பு நிறத்தில் இருக்கும் டிராகன் பழத்தின் சதைப்பகுதி சிறு கருப்பு விதையுடன் இருக்கும். இது வெண்ணிறத்தில் இருக்கும். இவ்வகை பழங்கள் உலகின் வெப்பமண்டல பகுதிகளில் மட்டுமே அதிகளவு பயிரிடப்படும். Washing Machine: இல்லத்தரசிகளே.. வாஷிங் மெஷின் வாங்க போறீங்களா?.. இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு போங்க.!
வியட்னாம் மக்களின் விருப்பப்பழம் (Vietnam Peoples): புளிப்பு & இனிப்பு சுவை கலந்து இருக்கும் டிராகன் பழம், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கிழக்காசிய பகுதிகளில் அதிகளவில் பயிரிடப்படும். வியட்நாம் மற்றும் தாய்லாந்து மக்கள் அதிகஅளவில் டிராகன் பழத்தினை விரும்பி சாப்பிடுகிறார்கள். இது உடலுக்கு குளிர்ச்சியை தரும். இப்பழத்தில் இருக்கும் ஆண்டி-ஆக்சிடென்ட் புற்றுநோயை தடுக்கிறது. உயர் இரத்த அழுத்த பிரச்சனையை சரி செய்கிறது. இதயத்தில் இருக்கும் இரத்த நாளத்தினை நன்றாக செயல்பட வைக்கும்.
இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி (Improving Blood Cells): நமது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்க டிராகன் பழம் உதவி செய்கிறது. டிராகன் பழத்தில் 90% நீர், நார்சத்து போன்றவை இருப்பதால் உடலை பசியின்றி வைக்கவும், அதிகளவிலான உணவை எடுத்துக்கொள்வதையும் தடுக்கும். இப்பழத்தில் இருக்கும் வைட்டமின் சி மூச்சுக்குழாய் கோளாறுகளை சரிசெய்யும். இரும்புசத்து இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவி செய்யும். நீர்சத்து சருமத்தினை ஈரப்பதத்தோடு வைக்கவும், வைட்டமின் பி3 தேவையற்ற கொழுப்பை கரைக்கவும், கால்சியம் மற்றும் பாஸ்பிரஸ் சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்தவும், பார்வைத்திறன், பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.