Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: கடக ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!
2025 ஆண்டு மார்ச் 29 அன்று நடைபெற உள்ளது சனி பெயர்ச்சி (Sani peyarchi). பொதுவாக சனிப் பெயர்ச்சி, 12 ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். அதில் கடக ராசி பலன்கள் குறித்து இப்பதிவில் நாம் காணலாம்.
பிப்ரவரி 07, சென்னை (Chennai News): சனி பெயர்ச்சி 29 மார்ச் 2025 அன்று மீன ராசியில் சனி பூரட்டாதி நான்காம் பாத பிரவேசத்தில் தொடங்கி , 17 மாறுபட்ட நட்சத்திர சாரங்களில் சனி சஞ்சாரம் நிகழ்கிறது சனி பகவான் மீன ராசியில் ஜூன் 3 , 2027 வரை சஞ்சாரம் செய்கிறார். இந்த கால கட்டத்தில் அதாவது 29 மார்ச் 2025 முதல் ஜூன் 3 , 2027 வரை உள்ள காலத்தில் சனி மீனத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் கடக ராசியில் பிறந்தவர்களுக்கான நட்சத்திர பாதம் சார்ந்த சனி பெயர்ச்சி பலன்கள் பார்க்கலாம். Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: மிதுன ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!
கடகம் சனி பெயர்ச்சி பலன்கள் (Kadagam Sani Peyarchi Palan 2025):
கடக ராசி புனர்பூசம் 4 ம் பாதம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்:
புயல் ஓய்ந்த நிலை. வேலை பார்க்கும் இடம் அல்லது தொழில், குடும்ப உறவுகள் என எல்லா பக்கமும் இருந்த அலைச்சல், எரிச்சல், குழப்பம் எல்லாம் சுமுகமாக தீர்ந்து விடும். எல்லா பிரச்சனைகளுக்கும் நல்லவிதமான தீர்வு எட்டப்பட்டு எல்லா சண்டைகளும் சரியாகி உறவுகள் சகஜ நிலைக்கு திரும்பி விடுவார்கள். வேலையில் இருந்த தடங்கல் நீங்கிவிடும். சம்பள உயர்வு அவசியம் கிடைக்கும். அயல் நாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும். வருமானத்தை மீறி கழுத்தை நெருக்கிக் கொண்டிருந்த செலவுகள் கட்டுக்குள் வந்துவிடும் வெளியிலிருந்து நிதி உதவி அவசியம் கிடைக்கும் இடமாற்றம் வீடு மாற்றம் வேலை மாற்றம் போன்ற பல முன்னேற்றமான மாற்றங்கள் அவசியம் நிகழும். பல சுப காரியங்கள் வீட்டில் நிகழும். புதிய வீடு வாங்குதல், பழைய வீட்டை புதுப்பித்தல், வாகனம் வாங்குதல் போன்ற அனைத்தும் கைகூடி வரும். சனி பகவான் இந்த பெயர்ச்சி காலத்தில் தனது சுயசாரமான உத்திரட்டாதி சாரத்தில் பயணிக்கும் போது புனர்பூசம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அதாவது கடக ராசி புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பல ஆச்சரியமான நன்மைகள் நிகழ்ந்து அவர்களை திக்கு முக்காட வைக்கும், உறவுகளில் யாராவது ஒருவருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து அதன் வழியே புனர்பூசம் நான்காம் பாத நட்சத்திர நண்பர்கள் அனுகூலம் அடைவது சனியின் மிகப்பெரிய கருணையாக அமையும்.
சனி உத்திரட்டாதி சாரத்தில் பயணிக்கும் போது நன்மைகள் நேரடியாக நடக்காது என்றாலும் மறைமுகமாக உறவுகள் மூலமாக அவசியம் நடந்தே தீரும் இது சனி கொடுக்கும் கருணை. புனர்பூசம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் இந்த சனி பெயர்ச்சி காலகட்டத்தில் கல்வி வளர்ச்சியில் திறமை மேம்பாட்டில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டால் வாழ்வில் பிற்காலத்தில் பெரிய உயரத்தை தொடலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் மனது மிகவும் பக்குவம் அடைந்து அதிகமாக கவனம் செலுத்த முடிந்த காலமாக இருக்கும். அதனால் கல்வி மேம்பாடு திறமை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். புனர்பூசம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் இத்தனை நன்மைகளை சனி பெயர்ச்சியால் அடைந்தாலும் சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும் குறிப்பாக சகோதர உறவுகளில் விரிசல் உண்டாகும் வாய்ப்பு உண்டு.
சகோதர உறவுகளில் வாக்குவாதத்தை தவிர்த்து விடுதல் மிகவும் நல்லது. அதே சமயம் சுய கௌரவத்தை பாதிக்காத அளவில் உறவு நிலைகளை அவசியம் பேணி பாதுகாக்க வேண்டும்.அதேபோல் நெருக்கமான உறவுகளின் யாராவது உடல் நலம் குறைந்து இருந்தால் இவர்கள் அதிகம் கவலைப்பட அவசியம் உண்டாகும். காரணம் நெருங்கிய உறவு வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி இரண்டும் கலந்து காணப்படும் காலமாக இருக்கிறது. தானாக முன்வந்து ஆரோக்கிய மேம்பாட்டில் கவனம் செலுத்துவார்கள் அப்படி செலுத்தினால் மிகுந்த நன்மையை சனி இந்த காலத்தில் தருகிறார். சனி ரேவதி நட்சத்திர சாரத்தில் பயணம் செய்யும்போது பொருளாதார விஷயத்தில் பணம், கடன், அலுவலக பொறுப்பு ஏற்பு இந்த மாதிரி விஷயங்களில் அதிக கவனமாக இருக்க வேண்டும் காரணம் தனது சக்திக்கு மீறி அகலக்கால் வைத்து விடும் அபாயம் உள்ளது. சனி பகவான் ரேவதி நட்சத்திர சாரத்தில் சஞ்சரிக்கும் போது புனர்பூசம் நான்காம் பாத அன்பர்கள் வாக்குறுதி கொடுப்பதை எச்சரிக்கையுடன் செய்ய வேண்டியது அவசியம்.
கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்:
கடக ராசி பூசம் நட்சத்திர அன்பர்கள் மகிழ்ச்சியுடன் இந்த சனி பெயர்ச்சி காலத்தை எதிர்கொள்ளலாம். முதல் மூன்று காரணம்! சனி இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் சஞ்சாரம் செய்யும் பூரட்டாதி நட்சத்திரம் அதி மித்ர தாரை, உத்திரட்டாதி நட்சத்திரம் ஜன்ம தாரை ரேவதி நட்சத்திரம் சம்ப தாரை. பெரிய இடத்திலிருந்து உதவிகள், பெரிய இடத்திலிருந்து வியாபார சம்பந்தங்கள், பதவி உயர்வு போன்ற அளவில் அதிகமான நன்மைகள் நிகழ வாய்ப்புள்ள காலகட்டம். பதவி உயர்வு, வியாபார அபிவிருத்தி புதிய முயற்சிகள் வழியாக வருமானம் என்று பல வகையில் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் எதிர்பார்க்கலாம். இதுவரை திட்டத்திலேயே இல்லாத புதிய வாய்ப்புகள் பூசம் நட்சத்திர அன்பர்கள் தானாக உருவாக்கி மேம்பாடு அடைவதை சனி தனது பெயர்ச்சி காலத்தில் கருணையாக வழங்குகிறார். Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: ரிஷப ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!
பல நன்மைகள் கொண்ட காலகட்டம் என்றாலும் உடல் நலத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டிய கட்டம் .
கடக ராசி பூச நட்சத்திர அன்பர்கள் எதிரிகள் குறித்து கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கலாம். ஆனாலும் எதிரிகளின் முயற்சிகளை முன் கூட்டியே சனி காட்டிக் கொடுத்து விடுவார், இவர் நமக்கு ஆபத்து தருகிறவர்,இது நமக்கு சாதகம் இல்லை இதை செய்யக்கூடாது என்ற உள் உணர்வு மேலோங்கி நிற்கும் காலம். தொழிலில் உறவுகளின் எதிர்பார்க்கும் போட்டிகளை தனி முன்கூட்டியே உள் உணர்வு மூலம் காட்டிக் கொடுத்து விடுவார். ஆகையால் அதை பயன்படுத்திக் கொண்டு சண்டை சச்சரவு இல்லாமல் விலகி நின்று வேடிக்கை பார்க்கலாம். கடக ராசி பூசம் நட்சத்திர அன்பர்களுக்கு சிறு சிறு காயங்கள் அடிக்கடி உண்டாகும். இதன் காரணமாக சின்ன சின்ன மருத்துவ சிகிச்சைகள் மூலம் கொஞ்சம் கொஞ்சம் காசும் பணமும் சேர்த்து வைத்த பொருளும் விரையம் ஆகும். பல நாள் பயன்படுத்தி வந்த பொருள்கள் செயல் இழந்து புதிய பொருள்களை வாங்க வேண்டிய அவசியம் உருவாகும். இது சுப விரயச் செலவாகவே இருக்கும். குறிப்பாக வாகன மாற்றம் நிச்சயம் நிகழும்.
கவனக்குறைவினால் பொருள் தொலைந்து போவது அதிலும் அதிக மதிப்புள்ள பொருள்கள் தொலைந்து போவது நிகழ்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது .ஆகவே இந்த விஷயத்தில் பூசம் நட்சத்திர அன்பர்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்ளும் போது இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள். இரண்டாவது சொத்து வாங்குதல் பெரிய அளவில் வீடு வில்லா வாங்குதல் போன்றவை நிகழும். சனி சஞ்சாரம் செய்யும் போது இருக்கும் தார பலனும் சனி பார்வையால் தூண்டப்படும் நட்சத்திர தாராபலமும் பூசம் நட்சத்திர அன்பர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது ஆகவே இந்த சனி பெயர்ச்சி பூசத்திற்கு அனுகூலமான பயன்களை கொண்டு வந்து தரும்
கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்:
சனி பூரட்டாதி சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது மித்திர தாரையாகவும் உத்திரட்டாதி நட்சத்திர சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது அதிமித்ர தாரையாகவும் ரேவதி நட்சத்திர சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது ஜென்ம தாரையாகவும் அமைந்து இந்த சனி பெயர்ச்சி கடக ராசி ஆயில்யம் நட்சத்திர அன்பர்களுக்கு பெரிய வரப்பிரசாதம் என்று சொல்ல வேண்டும். சனியின் பார்வையால் தூண்டப்படும் நட்சத்திர தார பலன்களும் பெருமளவில் நன்மையை தருபவயாக இருக்கின்றன. கடன் கொடுத்துவிட்டு எப்படி வசூல் செய்வது என்று தெரியாமல் இருந்தவர்களுக்கு நான் வசூல் செய்து தருகிறேன் என்று சொல்லி மிகவும் பலமுள்ள ஒரு நபர் வந்து வசூல் செய்து கொடுப்பது போல் இதுவரை தடங்கலாகி இருந்த அனைத்து விஷயங்களையும் சனி நான் செய்து தருகிறேன் என்று சொல்வது போல் செய்து தருவார். என்ன காரணம் என்று தெரியாமல் அலைக்கழித்த பல தடங்கலான விஷயங்கள் காரணமும் தெரிந்து நிவாரணமும் தெரிந்து முன்னேற்றமடைந்து பலன்களை கொடுக்கக் கூடிய காலகட்டம் இந்த சனிப்பெயர்ச்சி காலகட்டம்.
குறிப்பாக ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமண தடை விலகி விரைவில் திருமண பாக்கியம் அமைந்தவர்களாக ஆசீர்வதிக்கப்படுவார்கள். இதே போல. குழந்தை பாக்கிய தடை இருந்தவர்கள் அந்தத் தடை விலகி நல்லவிதமாக புத்திர பாக்கியம் அமைந்து மகிழ்ச்சி அடைவார்கள், இப்போது தொடங்கலாமா அப்புறம் தொடங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த தொழில் முயற்சிகள் தொடர்பான முக்கிய முடிவுகள் நீங்கள் எடுப்பீர்கள். அப்படி எடுக்கும் முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி தரும். லாபம் தரும. சொத்து சேரும் வாகன வசதி பெருகும் அதிகாரம் மிக்க பதவிகள் தேடி வரும் பொது நலம் காக்கும் அமைப்புகளில் பெரிய பொறுப்புகளை கொண்டு வந்து கொடுப்பார்கள். இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் சில முக்கியமான விஷயங்களில் கவனமாக இருப்பது அவசியம். உதாரணமாக மேலதிகாரிகள் அரசாங்கம் அரசு லைசன்ஸ் தரும் அதிகாரிகள் இவர்களிடம் எச்சரிக்கையாக பேச வேண்டியது அவசியம். ஆயில்யம் நட்சத்திர அன்பர்கள் தங்கள் தசா புக்தி காலம் சரியாக இருப்பின் இந்த சனி பெயர்ச்சியால் கிடைக்கும் ஆதாயத்தை கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகி விடக்கூடும், மிகப்பெரிய ஆதாயமான ஆதரவான பண வரவு தரக்கூடிய பொருள் வரவு தரக்கூடிய சனிப்பெயர்ச்சி என்று சொல்லலாம்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)