Agriculture Tips: விவசாயிகளுக்கு பயனளிக்க.. வட்டாரத்துக்கு, ஒரு வேளாண் விஞ்ஞானி.. விபரம் உள்ளே..!
வேளாண் விஞ்ஞானிகள், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உறவுகளையும், அவற்றின் சுற்றுச்சூழலையும் ஆய்வு செய்பவர்கள்.
ஜனவரி 16, சென்னை (Agri Tips): வேளாண்மை தொடர்பான அனைத்து தகவல்களையும், அறிவியல் ரீதியிலான ஆலோசனைகளையும் அந்ததந்த வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு நேரடியாக வழங்குவதற்காக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் வேளாண் கல்லூரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து, ஒரு வேளாண் விஞ்ஞானியை (Agronomist) ஒவ்வொரு வட்டாரத்துக்கும் பொறுப்பு அலுவலராக பணி அமர்த்துவதற்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியாகியது. Sankashti Chaturthi 2025: சங்கடஹர சதுர்த்தி 2025: விழாச்சிறப்பு, வாழ்த்துச் செய்தி இதோ.!
வட்டார வேளாண் விஞ்ஞானிகளின் பணிகள்:
- இந்த வேளாண் விஞ்ஞானிகள் அந்ததந்த வட்டாரத்தில் பெய்யும் மழை, மண்ணின் தன்மை, பயிர் சாகுபடி, கடந்த ஆண்டில் பூச்சி மற்றும் நோய் தாக்கிய விவரங்கள், பயிரில் இருந்து கிடைக்கும் மகசூல், விற்பனை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு புள்ளி விவரங்களையும் சேகரித்து, அந்ததந்த வட்டாரத்தில் விவசாயிகளுக்கு லாபம் தரும் வகையில் மகசூல் பெற மாற்றுப் பயிர்களை உள்ளடக்கி பயிர் சாகுபடி திட்டத்தை தயார் செய்து அதை விவசாயிகளுக்கு அலோசனையாக வழங்க வேண்டும்.
- இதனுடன், புதிய ரகப் பயிர்கள், விதைகள், நவீன கருவிகள் கையாளுதல், நிழல்வலைக்குடில், பசுமைக்குடில், மதிப்புக்கூட்டுதல், விற்பனை தொழில் நுட்பங்கள், மண்வல மேம்பாடு, அரசு திட்டங்கள் குறித்த அனைத்தையும் விவசாயிகளிடையே எடுத்துரைக்கவும் விழிப்புணர்ப்பு ஏற்படுத்தவும் வேண்டும்.
- வட்டார அளவில் நடைபெறும் விவசாயிகள் பயிற்சி முகாம்கள் மற்றும் ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொண்டு, அவ்வப்போது எழும் விவசாயம் சார்ந்த களப் பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப ரீதியாகத் தீர்வு காண விரிவாக்க அலுவலர்களுக்கு உதவ வேண்டும்.
- வட்டாரத்தில் உள்ள கிராமங்களின் விவசாயிகளை உள்ளடக்கிய வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி, அவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியிலான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
- வட்டாரத்திற்குள் உள்ள கிராம விவசாயிகள் தோட்டத்தில், புதிய பூச்சி தாக்குதல், நோய்தக்குதல் காணப்பட்டடால் அதை உடனடியாக ஆய்வு செய்து மற்ற விவசாய் நிலங்களுக்கு பரவாத வகையில் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். அதனுடன் விவசாயிகளை எச்சரிக்கை செய்ய வேணடும்.
- தோட்டகலை விளைபொருட்கள், அறுவடைக்கு பின் தரம் பிரித்தல், மதிப்புக் கூட்டுதல், குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து அதை லாபகரமானதாக மாற்ற, சந்தை வாய்ப்பை உருவாக்கித் தர உதவ வேண்டும்.
- வட்டார ஆய்வின் அடிப்படையின் படி, விவசாயிகளின் முக்கிய தொழில்நுட்பத் தேவைகளைப் பட்டியலிட்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவித்து அவற்றை ஆராய்ச்சியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)