IPL Auction 2025 Live

Vendakkai Chilli Recipe: மொறு மொறுப்பான வெண்டைக்காய் சில்லி செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் மொறு மொறுப்பான வெண்டைக்காய் சில்லி எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Vendakkai Chilli (Photo Credit: YouTube)

ஆகஸ்ட் 13, சென்னை (Kitchen Tips): ஸ்நாக்ஸ் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, வெண்டைக்காய் சில்லி செய்து கொடுத்தா சாப்பிடுவாங்க. அதில், குழந்தைகளுக்கு தேவையான புரோட்டீன், வைட்டமின் சத்துகள், நார்ச்சத்து, கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம்,  போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. அந்தவகையில், சுவையான வெண்டைக்காயை சில்லி (Vendakkai Chilli) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - அரை கிலோ

இஞ்சி பூண்டு விழுது - 1 கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி

கான்பிளவர், கடலை மாவு - 50 கிராம்

பெருங்காயத்தூள் - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. Banana Dosa Recipe: வாழைப்பழத்தில் தோசை செய்து சாப்பிட்டிருக்கீங்களா? வாழைப்பழ தோசை செய்வது எப்படி? விபரம் உள்ளே..!

செய்முறை:

முதலில் வெண்டைக்காயை (Ladies Finger) நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். அதில் இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் கான்பிளவர், கடலை மாவு பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை என அனைத்தையும் நன்கு கலந்து விடவும்.

மாவு வெண்டைக்காயில் ஒட்டவில்லை என்றால் சிறிது தண்ணீர் தெளித்து கலந்துகொள்ளவும். அந்த கலவையை சுமார் அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

அடுத்து, ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி, வெண்டைக்காயை ஒவ்வொன்றாக பிரித்து போட்டு பொரித்தெடுக்கவும்.

அதனை தட்டில் போடும் போது சலசலவென்று சத்தம் வரவேண்டும். அதுவே சரியான பக்குவம் ஆகும். அவ்வளவுதான் சுவையான வெண்டைக்காய் சில்லி ரெடி.