Ice Apple Kulfi Recipe: அடிக்கும் வெயிலுக்கு ஜில்லுனு ஒரு நுங்கு குல்ஃபி.. சுவையாக செய்வது எப்படி?.!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான நுங்கு குல்ஃபி நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

Kulfi (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 02, புதுடெல்லி (New Delhi): நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை உள்ளது. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், இரண்டுக்குமே நுங்கு அருமருந்தாக உள்ளது. இப்படிப்பட்ட நுங்கில் குல்ஃபி (Ice Apple Kulfi) செய்து சாப்பிட்டு, இந்த கோடைகாலத்தைக் குளிச்சியாக்குவது எப்படி என்று இப்பதிவில் நாம் காணலாம்.

தேவையான பொருட்கள்:

நுங்கு - 8

காய்ச்சிய பால் - 2 டம்ளர்

சர்க்கரை - 1/4 கப்

சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்

ஐஸ்க்ரீம் குச்சிகள் - 8

நுங்கு துண்டுகள் - 4 டேபிள் ஸ்பூன் Prevent Heating Issues On Your Phone: சம்மரில் உங்களுடன் சேர்ந்து உங்கள் போனும் புகையுதா... தடுக்க இதோ வழிகள்..!

செய்முறை: முதலில் நுங்கை சுத்தம் செய்து, தோலை நீக்கி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி பிளேட்டில் போடவும். பின்னர் பெரிய மிக்ஸி ஜாரில், நுங்கு, சர்க்கரை, சேர்த்து நன்கு அரைக்கவும். அடுத்து பாலை ஊற்றி அரைத்துக் கொள்ளவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் அரைத்ததை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

மறுபக்கம் சோள மாவை பாலில், சேர்த்து, கட்டிகள் இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். நன்கு கொதித்து குறுகினதும், சோளமாவு கரைசலை ஊற்றி கைவிடாமல் கிளறி, ஒன்று சேர சிறிது கெட்டியானதும், அடுப்பை நிறுத்தி விட்டு இறக்கவும். இறக்கி ஆறினதும், டம்ளர்களில் ஊற்றி மேலே நுங்கு துண்டுகளை போடவும். பிறகு ஐஸ்க்ரீம் குச்சிகளை சொருகி, ஃப்ரீஸரில் 8 மணி நேரம் வைக்கவும்.

பிறகு வெளியில் எடுத்து, டம்ளரின் அடிப்பகுதியை குழாயின் கீழே 1 நிமிடம் காட்டி, டம்ளரில் இருந்து எடுக்கவும். இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான, நுங்கு குல்ஃபி தயார். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement