Phone overheating (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 02, புதுடெல்லி (New Delhi): இன்று எல்லார் கையிலும் ஸ்மார்ட்போன் (Smartphone) எப்பவும் உள்ளது. இந்த செய்தியை கூட அதில் தான் எல்லாரும் படித்து இருப்பீர்கள். அப்படிப்பட்ட ஸ்மார்ட் போன், கோடைகாலத்தில் அதிகமாக சூடாகிறது. அதுவும் திரையைத் தொட்டாலே கொதிக்கும். அதை தடுக்கும் வழிமுறைகளைப் (Prevent Heating Issues) பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

கோடை காலத்தில் (Summer) முடிந்த வரை உங்கள் மொபைலை வெயிலில் இருந்து விலக்கி வைத்துக்கொள்வது பாதுகாப்பானது. உங்கள் ஃபோனின் பிரைட்னஸை நீங்கள் அதிகரிக்காமல் இருப்பது நல்லது. இது உங்கள் பேட்டரியை அதிகமாக பயன்படுத்தும் என்பதை தாண்டி, இது அதிக வெப்பத்தை உருவாக்கி, உங்கள் சாதனத்தை அதிக வெப்பமடைய செய்கிறது. இது வெயில் காலத்தில் தொடர்ந்தால், உங்கள் போன் ஓவர் ஹீட் ஆகி ஏதேனும் ஒரு நேரத்தில் செயலிழக்க வாய்ப்புள்ளது. Bus-Lorry Collision On Trichy-Chennai Highway: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பஸ்ஸை நொறுக்கி விட்டு ஓடிய லாரி டிரைவர்.. 2 பேர் பலி.. 12 பேர் காயம்..!

உங்களுடைய போனுக்கான சார்ஜரை மட்டும் பயன்படுத்த வேண்டும். ஏதாவது பழுது ஏற்பட்டு மொபைல் போனின் பேட்டரியை மாற்றும் போது, எக்காரணம் கொண்டு போலியான அல்லது மலிவான பேட்டரிகளை வாங்காதீர்கள். அது உங்கள் போனிற்கே ஆபத்தாக அமையலாம். போலி பேட்டரிகள் எளிதில் சூடாகி விடும். சில நேரங்களில் அதிக வெப்பத்தினால் வெடிக்கும். தேவையற்ற செயலிகளை தவிர்ப்பது மிக நல்லது. இதனால் அதிகம் பேட்டரி வீணாவதோடு, போனின் வெப்பமும் அதிகமாகும். போன் சூடாவதை கோடை காலம் மட்டுமின்றி எல்லா நேரத்திலும், சரியாக கவனித்து வந்தால், உங்கள் போன் பல ஆண்டுகளுக்கு சீராகச் செயல்படுவதை உறுதிப்படுத்த முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.