IPL Auction 2025 Live

Benefits Of Muskmelon: முலாம் பழத்தில் உள்ள நன்மைகள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

சுவையான முலாம்பழத்தில் உள்ள பயன்கள் என்னென்ன என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Mulam Palam (Photo Credit: Pixabay)

ஜூன் 06, சென்னை (Health Tips): முலாம்பழம் (Muskmelon) இனிப்புச் சுவையும், நறுமணமும் கொண்டது ஆகும். இது உடல் சூட்டை போக்க கூடியது. வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்தது. வெயில் காலத்தில் உடல் சார்ந்த பிரச்சனைகளை தணிக்கும் தன்மை இதற்கு உள்ளது. இதன் முழு பலன்களை பற்றி இதில் பார்ப்போம்.

முலாம் பழத்தின் பயன்கள்:

முலாம்பழத்தை (Mulam Palam) தொடர்ந்து சாப்பிட்டுவர மூல நோய் குணமாகும். மலசிக்கல், நீர்க்கடுப்பு நீங்கும், அஜீரணத்தை அகற்றி பசியை உண்டாக்கும். முலாம்பழம் பித்தத்தை அகற்றும். கல்லீரல் கோளாறுகளை போக்கும். மேலும், சரும நோய்க்கு தேர்வு அளிக்கும். இந்த பழத்தின் சதையுடன் தேன் கலந்து சாப்பிட்டுவர வாய்ப்புண், தொண்டைப்புண் குணமடையும். Love Couple Suicide: காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை; அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு..!

இதன் சதைப்பகுதி மற்றும் விதையுடன் சிறிதளவு சீரகப்பொடி சேர்த்து கொதிக்க வைத்து, பின்பு வடிகட்டி பருகினால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதுடன் உற்சாகத்தையும் கொடுக்கின்றது. சிறுநீர்த் தாரையில் ஏற்படும் எரிச்சலை தடுக்கின்றது. மேலும், கர்ப்பிணி பெண்கள் முலாம்பழத்தை எடுத்துக்கொண்டால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுகிறது.

விதை நீக்கிய முலாம்பழம் மற்றும் பனங்கற்கண்டு, சிறிதளவு குங்குமப்பூ இவற்றை காய்ச்சிய பாலுடன் சேர்க்கவும். இந்த மில்க் ஷேக்கை காலை உணவின் போது பருகலாம். இது குழந்தைகளின் உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும். கனிந்த பழத்தின் சதைப்பகுதியை சாப்பிடலாம். இதனை பருகி வர உடல் சூடு குறையும்.

இதில் உள்ள வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ தாதுப் பொருட்கள் நோயெதிர்ப்புச் சக்தியை உண்டாக்கும். கல்லீரல் கோளாறுகளை போக்குகிறது. கண் பார்வை திறனை அதிகரிக்கும் சக்தி உள்ளது. மேலும், பல்வேறு கோடை நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்கிறது.