Carrot Benefits: தினமும் கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..?
கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
ஜூலை 22, சென்னை (Health Tips): மலைப் பிரேதசங்களில் அதிகமாக விளைவிக்கக்கூடிய கேரட்டை பலர் குளிர்காலத்தில் சாப்பிட விரும்புகிறார்கள். கேரட் (Carrot) பல்வேறு உணவுகளில் சேர்த்து உண்கின்றனர். இதுதவிர, இனிப்பு வகைகளிலும் கேரட்டை பயன்படுத்துகின்றனர். அந்தவகையில், கேரட்டில் உள்ள நன்மைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கண்களுக்கு நல்லது: இதில் அதிகளவு வைட்டமின் ஏ இருப்பதால், இது கண்களுக்கு மிகவும் நல்லது. கேரட் நல்ல கண்பார்வை பராமரிக்க உதவுகிறது.
புற்றுநோயைத் தடுக்கிறது: கேரட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இதனால் கேரட்டை தொடர்ந்து சாப்பிடவர புற்றுநோய் அபாயம் தடுக்கப்படும்.
செரிமானத்திற்கு நல்லது: இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த நார்ச்சத்து வயிற்றை ஆரோக்கியமாகவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது. Sanitation Worker Recovered Diamond Necklace: குப்பை தொட்டியில் இருந்து வைர நெக்லஸை மீட்ட தூய்மை பணியாளர்; குவியும் பாராட்டு.. வீடியோ வைரல்..!
இரத்த அழுத்த கட்டுப்பாடு: குளிர்காலத்தில் பலருக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கும். கேரட்டின் பல கூறுகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
இதய ஆரோக்கியம்: கேரட்டில் லைகோபீன் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு: வைட்டமின் சி சத்து இதில் நிறைந்துள்ளதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை சரியாகும்.
உடல் எடை குறைப்பு: கேரட் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகின்றது. கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன்மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து, உடல் எடை இழப்பு ஏற்படும்.
சரும பராமரிப்பு: கேரட்டின் பல கூறுகள் சருமத்திற்கு நல்லது. கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளப்பாகும், சரும வறட்சி நீங்கி முகம் பொலிவு பெறும்.