Radish Benefits: நீர்ச்சத்து நிறைந்த முள்ளங்கியில் உள்ள பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த முள்ளங்கியில் உள்ள பயன்களை இந்த பதிவில் காண்போம்.
ஜூலை 24, சென்னை (Health Tips): நம் உடல் சூட்டை தணிப்பதில் முள்ளங்கி (Radish) முக்கியப்பங்கு வகிக்கிறது. இதில், வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருத்துவ குணம் வாய்ந்தது. அந்த வகையில் வெள்ளை முள்ளங்கியில் (Mullangi) உள்ள பல்வேறு மருத்துவ பயன்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
முள்ளங்கியில் உள்ள மருத்துவ பயன்கள்:
முள்ளங்கியில் நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் இருக்கின்றன. இது உடல் எடையை குறைப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றது. மேலும், முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
இதில் அதிகளவு நீர்ச்சத்து இருப்பதால், உடலுக்கு தேவையான அளவு நீர்ச்சத்தை தருவதோடு நம்மை சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்கிறது. இது வயிறு மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிக்கக் கூடியது ஆகும். Young Man Dies: வேட்டை துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு; நண்பர்கள் இருவர் கைது..!
முள்ளங்கி குறைந்த கார்போஹைட்ரேட், மாவுச்சத்து இல்லாத காய்கறி வகைகளில் ஒன்றாகும். இது உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களையும், தாது உப்புக்களையும் அளிக்கிறது.
முள்ளங்கியில் கால்சியம் சத்து மற்றும் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் உள்ளன. முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.
வெள்ளை முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டவை ஆகும். முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து குடித்தால் மலச்சிக்கல், சளித் தொல்லை போன்ற பிரச்சனைகள் சரியாகும். சிறுநீர்ப் பாதையில் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இது பயன்படும்.
முள்ளங்கியை அரைத்து சாறு எடுத்து, அதை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.