Mochai Payaru Benefits: மொச்சை பயறில் உள்ள மருத்துவ பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
பலவிதமான மருத்துவ பயன்களை கொண்ட மொச்சை பயறு பற்றி இந்த பதிவில் காண்போம்.
ஆகஸ்ட் 09, சென்னை (Health Tips): மொச்சை கொட்டை (Broad Beans) வறட்சியான பகுதிகளில் விவசாயம் செய்ய மிகவும் உகந்த பயிர் வகை ஆகும். இது மொச்சை பயறு (Mochai Payaru), லிமா பீன்ஸ், பட்டர் பீன்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது. இதனைக் கொண்டு பலவகையான உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. மொச்சை கொட்டையில் வெள்ளை மொச்சை, கருப்பு மொச்சை, சிவப்பு மொச்சை, மர மொச்சை, நாட்டு மொச்சை என பல வகைகள் இருக்கின்றன. இதில் நமது உடலுக்கு தேவையான புரதம், நார் சத்துகள், மினரல்ஸ் போன்றவைகள் அதிகமாக உள்ளது. இதன் விதைகள் பச்சையாகவும், காய வைக்கப்பட்ட பிறகும் சமைத்து சாப்பிடப்படுகிறது. மொச்சையில் டானின், டிரைப்சின் போன்ற வேதிபொருட்கள் இருப்பதால் சமைப்பதற்கு முன் ஊறவைத்து, வேதிப்பொருட்களை நீக்க வேண்டும். Does Cancer Cause Night Sweats?: இரவில் ரொம்ப வியர்க்குதா? புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்.. வெளியான பகீர் தகவல்..!
மொச்சை பயறில் உள்ள மருத்துவ பயன்கள்:
இதய ஆரோக்கியம்: மொச்சை பயறில் குறிப்பிட்ட அளவு நார்ச்சத்து, பொட்டாசியம், போலேட் மற்றும் சபோனின் போன்ற சத்துகள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.
செல்களை புதுப்பிக்கும்: இதில் அதிகளவு புரதச் சத்து உள்ளது. புரதம் என்பது உடலில் உள்ள அணுக்கள் மற்றும் செல்களின் வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படுகிறது.
புற்றுநோய் வராமல் தடுக்கும்: மொச்சைக் கொட்டையில் உள்ள நார்சத்து, பெருங்குடல் பகுதியில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்களைத் தடுக்கிறது. இதில், ஒரு சிறிய அளவு ‘ஜெனிச்டின் மற்றும் டைட்சின்’ என்னும் ஐஸோஃப்ளவன்கள் உள்ளது. இது மார்பக புற்றுநோயைத் தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
மலச்சிக்கலைத் தடுக்கும்: மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், மொச்சை பயரை உணவில் சேர்த்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
உடல் எடை குறைப்பு: இது உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து கலோரிகளை எரிக்கும். 100 கிராம் மொச்சையில் 36 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதனால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்கும்.
பெரும்பாலோனார் மொச்சையை சாப்பிட்டால் வாயுத் தொல்லை ஏற்படும் என இதனை ஒதுக்கி வைக்கின்றனர். இனிமேல், மொச்சையை வேக வைக்கும் போது இஞ்சி, பூண்டு சேர்த்து சமைத்தால் வாயுத்தொல்லை ஏற்படாது.