Mint Leaves Benefits: புதினாவில் உள்ள மருத்துவ பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

புதினாவில் உள்ள மருத்துவ பயன்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காண்போம்.

Mint (Photo Credit: Pixabay)

ஜூன் 28, சென்னை (Health Tips): புதினா இலைகள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, நம்முடைய உடல் ஆரோக்கியத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. புதினா எல்லா பருவங்களிலும் கிடைக்கும் அற்புதமான, வீட்டில் வளர்க்க கூடியதாகும். புதினாவில் (Mint Leaves) உள்ள மருத்துவ பயன்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

புதினாவில் உள்ள மருத்துவ பயன்கள்:

புதினாவில் அதிக ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை ஒவ்வாமைக்கு நல்ல மருந்தாக பயன்படும். செரிமான கோளாறுகளுக்கு சிறந்தது. அசைவ உணவுக்கு பிறகு புதினா நீர் குடிப்பது நல்லது.

புதினா இலைகள் வயிற்று கோளாறுகளில் இருந்து குணப்படுத்தும். வீக்கம், வாயு, மாதவிடாய் வலிக்கு நிவாரணம் அளிக்கும். புதினா இலைகளை சாப்பிடுவதால் பித்த சுரப்பை அதிகரிக்கின்றது. மேலும், உடலில் பித்த ஓட்டத்தை ஊக்குவிக்கின்றது. Pakistan Heat Wave Death: பாகிஸ்தானில் கடும் வெப்பம்; சுமார் 450-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு.. சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!

தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களின் முலைக்காம்பு விரிசலை சரிசெய்கிறது. தாய்ப்பாலுடன் வரும் வலியைக் குறைக்கின்றது. மேலும், தலைவலிக்கு நிவாரணம் அளிக்கும். வாய் துர்நாற்றத்தை முற்றிலும் நீக்குகின்றது. குடல் எரிச்சல் நோயிலிருந்து விடுபட உதவுகிறது.

புதினாவில் இருக்கும் மெந்தோல் எனும் பொருள் மூக்கடைப்பைப் போக்க உதவுகின்றது. நெடுநாள் இருமல் உண்டாக்கும் எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கின்றது. மெந்தோல் தொண்டை வலியையும், காய்ச்சலையும் குணப்படுத்தும். சரும அழகை பாதுகாத்து, சருமத்தில் உள்ள தொற்று, அரிப்புகளை குணப்படுத்துகின்றது. சருமத்தில் உள்ள முகப்பருவையும் நீக்கும்.

புதினா தேநீர் அருந்துவதால் அமைதியான மனநிலை ஏற்படும். வயிற்று வலி, சோர்வு, ஜலதோஷம் ஆகியவை நீங்கும். சுமார் 7 முதல் 10 புதினா இலைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்துவிட்டு, பின்னர் அதனை வடிகட்டி, காலையில் குடித்துவர நமது உடலின் எல்லா நோய்க்கு எதிராகவும் போராடும்.