Winter Heart Attack: குளிர்காலத்தில் மாரடைப்பு அபாயம் அதிகரிப்பு.. அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!
அதிக குளிர் மற்றும் அதனால் ஏற்படும் பிற பிரச்சனைகள் மாரடைப்புக்கு வழிவகை செய்யும் என்பதால், அதுகுறித்து இன்று தெரிந்துகொள்ளலாம்.
டிசம்பர் 28, சென்னை (Health Tips): இதயம் (Heart Problems) சார்ந்த நோய்கள், மாரடைப்பு மரணங்கள் என்பது கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் இந்தியாவில் மிக சாதாரண விஷயமாக இருக்கிறது. வயதானவர்களுக்கு மட்டுமே அதிகம் ஏற்பட்டு வந்த மாரடைப்பு ஆபத்து, இன்றளவில் பச்சிளம் குழந்தை முதல் இளவயதுள்ளவர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக குளிர்காலத்தில் இதயம் சார்ந்த நோய்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். தனிமனிதனின் இதயமானது தனது இயல்பு நிலையை விட கடினமாக உழைக்கும். இதனால் இதயம் சார்ந்த நோய்கள் அதிகரிக்கும். குளிரின்போது இதயத்தின் தமனிகள் சுருங்கி கடினமாகும் என்பதால், உடலுக்கு இரத்தத்தை அனுப்ப இதயம் கடினமான உழைப்பை ஏற்படுத்தும். குளிர்காலத்தில் சாதாரண நபர்களை விட இதய நோய் அறிகுறி அல்லது பாதிப்பு உடையோர் கவனமாக இருப்பது நல்லது.
மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் காரணிகள்:
உடலை சூடாக வைக்க, உடல் முழுவதும் ஆக்சிஜனை வழங்க இதயம் கூடுதலாக 2 மடங்கு உழைப்பை வெளிப்படுத்தும். இது இதயத்தின் தசைக்கு ஆக்சிஜன் வழங்கும் சேவை குறைந்து, இரத்தம் உறைந்து ஒருகட்டத்தில் பக்கவாதம், மாரடைப்பு அபாயங்கள் ஏற்படுகிறது. ஜலதோஷம் இருந்தால், இதய நோயாளிகள் கடும் கவனத்துடன் செயல்பட வேண்டும். குளிரில் உடலின் இரத்த நாலாம் என்பது சுருங்கி விரிவதால், இரத்த அழுத்தம் அதிகமாகும். இதனால் மாரடைப்பு அபாயம் அதிகரிக்கும். உடலின் இரத்தம் உறைநிலை அல்லது தடிமன் நிலைக்குள் செல்லும்போது, இரத்த உறைவு அபாயம் ஏற்படும். இதனால் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடுக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படலாம். குளிர்காலத்தில், அதிக குளிர்ந்த காரணமாக மக்கள் உடற்பயிற்சியை தவிர்க்கலாம். இதனால் உடல் தனது இயல்பான செயல்பாடுகளில் இருந்து தள்ளிச்செல்லும் நிலையில், இதயம் பலவீனமாகி இதய பிரச்சனை ஏற்படும். குளிரில் இருந்து உடலை பாதுகாக்க, உடலை சூடாக வைக்க இதயம் கடின உழைப்பை வெளிப்படுத்துவதால், இதயத்தின் அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்படும். Health Tips: குளிர்கால சரும நோயால் அவதிப்படுறீங்களா? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!
மாரடைப்பு அறிகுறிகள்:
மார்பில் வலி, மார்பு கணம், சுவாசிப்பதில் சிரமம், மூச்சுத்திணறல், மயக்கம், பலவீனத்துடன் உணர்வது, கைகள்-தோள்கள், தாடை, முதுகு பகுதிகளில் வலி, திடீர் அதிக வியர்வை போன்றவை மாரடைப்புகளுக்கான அறிகுறியாக கவனிக்கப்படுகிறது. இவ்வாறான அறிகுறிகள் இருப்போர், கவனமுடன் செயல்படுவது நல்லது.
குளிர்காலத்தில் மாரடைப்பை (Winter Heart Attack Tips) தடுக்கும் வழிமுறைகள்:
இக்காலங்களில் உடலை சூடாக வைக்க, அதற்கேற்ப ஆடைகளை தேர்வு செய்து அணிய வேண்டும். குளிர்ந்த காற்றை தவிர்க்கலாம். வீட்டின் வெப்பநிலையை பராமரிக்க வேண்டும். உடற்பயிற்சி கட்டாயம் அவசியம் என்பதை மறக்க வேண்டாம். லேசான நடை, யோகா பயிற்சி கூட நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நார்சத்து, ஒமேகா 3 நிறைந்த உணவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சிகிரெட், மது போன்ற பழக்கம் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் என்பதால், அதனிடம் இருந்து விலகி இருத்தல் வேண்டும். இரத்த அழுத்தம், சர்க்கரை நோயின் அளவு குறித்து பரிசோதனை செய்து, மருந்துகளை உரிய முறையில் எடுக்க வேண்டும். குளிர்ந்த நீரை நேரடியாக திடீரென பயன்படுத்த கூடாது. இதய நோயாளிகள் உடற்பயிற்சி, சீரான உணவு, மனஅழுத்தத்தை குறைத்து வைத்திருத்தல் நல்லது. காற்று மாசுபாடு காரணமாகவும் குளிர்காலங்களில் இதய நோய் பாதிப்புகள் உண்டாகும். போதிய ஆக்சிஜன் உடலுக்கு கிடைக்காமல் மாரடைப்பு அபாயம் அதிகரிக்கும்.
குறிப்பு: மேற்கூறிய அறிகுறிகள் / தகவல்கள் பொதுவானவையே. உங்களுக்கு அதுசார்ந்த உடல்நலக்குறைவு / உடல் ஆரோக்கியம் தொடர்பாக சந்தேகம் இருப்பின், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம். அவரின் அறிவுறுத்தலின் பேரில் தேவைப்பட்டால் உடல் பரிசோதனை செய்து, மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப செயல்படலாம்.