Jenmashtami Special: கோகுலாஷ்டமியின் சிறப்புகள்: தத்துவம் உணர்ந்து கிருஷ்ணனை வழிபடுவோம்.!
ஆவணி மாதம், அஷ்டமி அன்று, ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணர் பூலோகத்தில் பிறந்தார். அவர் தனது ஒன்பதாவது அவதாரத்தில் அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலை நாட்டினார். அவரது பிறந்தநாளை போற்றும் வகையில் வீடுகளில் இன்று கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது.
செப்டம்பர் 6, சென்னை (Krishna Jayanti): அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலை நாட்டுவதே கிருஷ்ண அவதாரத்தின் நோக்கம் என்று இதிகாசங்கள் கூறுகிறது. அதற்கேற்ப அநியாயத்தின் வழியில் நடந்த கௌரவர்களை யுத்தம்செய்து கொன்று, பாண்டவர்களை வெற்றி பெறச் செய்து, தர்மத்தை ஸ்தாபித்தார். இதுவே மகாபாரதத்தின் மைய கருத்து ஆகும். மேலும் கிருஷ்ண அவதாரத்தால்தான் புனித நூலான கீதையும் (Bhagavat Gita) உருவானது.
இந்த அவதாரத்தில் கிருஷ்ணர், வசுதேவர் மற்றும் தேவகிக்கு மகனாக சிறைச்சாலையில் பிறந்தார். ‘எப்போதெல்லாம் பூலோகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் அதை அழித்து, தர்மத்தை நிலை நாட்ட மகாவிஷ்ணு அவதரிப்பார்’ என்பதை உணர்த்தும் விதமாக தனது ஒன்பதாவது அவதாரத்தில் உலகில் ஸ்ரீ கிருஷ்ணர் பிறப்பெடுத்தார். Minor Girl Raped by Teacher: 16 வயது சிறுமிக்கு எய்ட்ஸ்; 29 வயது ஆசிரியரின் அதிர்ச்சி செயலால் பரிதவிக்கும் குடும்பம்.. நெஞ்சை பதறவைக்கும் விபரம் உள்ளே.!
கிருஷ்ணர் பூமியில் பிறந்ததினம் தான் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. மேலும் இன்று வீடுகளில் வாசல் தொடங்கி, பூஜை அறை வரையிலும் அரிசி மாவு நீரைக் கொண்டு,குழந்தையின் கால் தடம் வரைந்து, கண்ணனை வீட்டிற்குள் வரவேற்பர்.
கோகுலாஷ்டமி அன்று வீடுகளில், கிருஷ்ணரின் படத்தை பூக்களால் அலங்கரித்து, அவருக்கு பிடித்த உணவு வகைகளை வைத்து வழிபாடு செய்வர். கிருஷ்ணருக்கு பிடித்த தின்பண்டங்களோடு, பால், தயிர், வெண்ணெய் ஆகிய மூன்றையும் சேர்த்து ‘தஹிகலா’ தயாரிப்பது வழக்கம். கிருஷ்ணரின் அருள் பெற்று அனைவரும் வாழ்வில் வளம் பெறுவோம்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)