ஆகஸ்ட் 16, சென்னை (Chennai News): 'எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ, அப்போதெல்லாம் மக்களை காக்க நான் அவதரிப்பேன்' என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாக்கு. ஒவ்வொரு ஆண்டும் இந்து சமய வழிபாடுகள் மற்றும் பஞ்சாகத்தின்படி ஆடி மாதம் நிறைவடையும்போது, ஆவணி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பிக்கப்படும். தேவகி - வசுதேவர் தம்பதிகளுக்கு 8வது குழந்தையாக பிறந்த கிருஷ்ணர் அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தி (Krishna Jayanthi) நன்னாளாக சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் கிருஷ்ணரை மனமுருகி வணங்கி வாழ்வில் மகிழ்ச்சி, அன்பை அருளும் என்பது ஐதீகம். Krishna Jayanthi Special: கிருஷ்ணருக்கு பிடித்த திரட்டுப்பால், நெய் அப்பம், வெண்ணெய் உட்பட 8 ஸ்பெஷல் பலகாரங்கள்.. வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.!
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மந்திரம் (Lord Krishna Mantra):
"ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே"
இந்த மகாமந்திரத்தை 108 முறை சொல்லி கிருஷ்ணருக்கு விரதம் இருந்து, வெண்ணெய் உட்பட கிருஷ்ணருக்கு பிடித்த உணவுகளை படைத்தது வழிபடுவது நன்மையை தரும். வீட்டின் செல்லக் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் - ராதை போலவும் வேடமிட்டு வழிபாடு செய்யலாம். இது கிருஷ்ணரின் அருளை பெற உதவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. Krishna Jayanthi Wishes in Tamil: 'கிருஷ்ணரின் பிறந்தநாளை கொண்டாடுவோம்' - உங்களுக்கான கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து செய்தி.!
யுகங்கள் குறித்து கிருஷ்ணர் கூறியது:
உலக மனிதர்களுக்கு எல்லாம் பொருந்தக்கூடிய பகவத்கீதையில், கிருஷ்ணர் யுகங்கள் குறித்து அர்ஜுனனிடம் மகாபாரத போரில் வாகனத்தை செலுத்தும்போது ஒவ்வொன்றாக எடுத்துரைத்தார். யுகங்கள் குறித்து கிருஷ்ணரின் கூற்று குறித்த தகவலை பின்வருமாறு பார்க்கலாம்.
பிரம்மலோகம் உட்பட அனைத்து உலகமும் அழிந்து உண்டாகும். பிரம்மலோகம் ஒரு கால வரையறைக்குள் அழியும். கிருஷ்ணனாகிய எனக்கு அழிவு இல்லை. நான் யுகங்களின் காலத்தை கடந்தவன். யுகங்கள் 4 வகைப்படும்.
1) ஸ்தய யுகம் (17,28,000 ஆண்டுகள்)
2) திரேதா யுகம் (12,96,000 ஆண்டுகள்)
3) துவாபர யுகம் (8,64,000 ஆண்டுகள்)
4) கலியுகம் (4,32,000 ஆண்டுகள்)
4 யுகங்களும் சேர்ந்தது 1 சதுர்யுகம் அல்லது தேவயுகம் ஆகும். கண்ணின் கூற்றுப்படி மகாபாரத காலம் கலியுகமாக சொல்லப்பட்டுள்ளது. அது தொடக்கமா? முடிவா? என்பது குறித்த விபரங்கள் இல்லை. நாம் வாழ்வது கலியுகமாக இருப்பின், கிருஷ்ணரின் கூற்றுப்படி கலி முற்றும்போது விஷ்ணு தனது 10வது அவதாரத்தை எடுத்து பழைய உலகை முற்றிலும் அழித்து புதிய உலகத்தை உருவாக்குவார். இயற்கையின் படைப்பிலும், அதன் சீற்றத்திலும் ஏழை-செல்வந்தன், நோயுள்ளவன்-நோயற்றவன் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரையும் தான் ஆக்ரோஷப்படும்போது அழித்துவிடும். அதே பாணி விஷ்ணுவின் 10வது அவதாரத்தில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. அல்லது மக்கள் அனைவரையும் அவர் நல்வழிப்படுத்தலாம். பூமியில் ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். நமது 30 ஆண்டுகள் தேவர்களுக்கு ஒரு மாத அளவே ஆகும். நமது 360 ஆண்டுகாலம் தேவைகளுக்கு ஒரு ஆண்டு ஆகும். பிரம்மாவின் ஆயுட்காலம் மகாபாரத காலத்திலேயே 50 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 50 பிரம்ம ஆண்டுகள் முடிந்ததும் பிரம்மா மறைவார். அதன்பின் வேறொரு பிரம்மா படைக்கப்படுவார் என்பது கிருஷ்ணர் சொல்லிய தகவல் ஆகும்.
பக்தர்களின் வேண்டுதல்:
ஒரு பக்தர் எந்த முறையில் கிருஷ்ணனை வேண்டினாலும், தாயுள்ளதுடன் குழந்தைக்கு தேவையானதை மட்டுமே கிருஷ்ணர் அருளுவார். குழந்தை கேட்கிறது என தாய் அனைத்தையும் கொடுத்தால் அது குழந்தைக்கு மிகப்பெரிய விளைவை எதிர்காலத்தில் ஏற்படுத்தும். அதேபோல, பக்தர்கள் கேட்டதையெல்லாம் கிருஷ்ணர் கொடுப்பதில்லை. அவர்களின் வாழ்க்கைக்கு தேவையானதை மட்டுமே கொடுப்பார். இந்த தகவல் கிருஷ்ணர் கூறியது ஆகும். தனிமனிதரின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அவரின் செயல்பாடுகளை சார்ந்தே இருக்கிறது. அதனை ஒவ்வொருவரும் புரிந்து செயல்பட வேண்டும்.