Gandhi Jayanti (Photo Credit: LatestLY)

அக்டோபர் 02, புதுடெல்லி (Special Day): நாடு முழுவதும் தேசத்தந்தை காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டினை காந்தி ஜெயந்தியாக (Gandhi Jayanti) கொண்டாடி வருகிறோம். இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தி மிகவும் முக்கியமானவர். அவர் இல்லாவிடின் சுதந்திரம் என்பது நமக்கு அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்திருந்திருக்குமா? என்பது சந்தேகம்தான். சுதந்திரத்தின் தாகம் மக்களிடையே எழுந்திருக்குமா? என்றாலும் சந்தேகம் தான். ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராகவும் சமூகத்திலிருந்த தீண்டாமைக்கு எதிராகவும், அகிம்சை என்னும் அமைதி ஆயுதத்தினை கொண்டு போராடி, அதில் உலகமே வியந்து பார்க்கும் அளவில் வெற்றியையும் பெற்றவர் காந்தி (Happy Gandhi Jayanti).

பிறப்பு: 1869 ஆம் ஆண்டு குஜராத்தில் போர்பந்தர் என்ற கடற்கரை நகரத்தில் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி மற்றும் புத்திலிபாய் தம்பதியர்களுக்கு அக்டோபர் இரண்டாம் நாள் பிறந்தவர்தான் காந்தி. லண்டனில் சட்டம் படித்து 1893 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு வழக்கறிஞராக பணியாற்ற சென்றார். சுமார் 21 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். அது மட்டும் இன்றி அங்கு அவர் குடியுரிமை மற்றும் இன பாகுபாடு, அதிக வரி ஆகியவற்றிற்கு எதிரான அமைதிப் போராட்டங்களை முன்னெடுத்தார். தென்னாப்பிரிக்காவில் சென்ற முதல் காலகட்டத்தில் காந்தி, நிற வேறுபாடு மற்றும் இனப் பாகுபாடு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டார். ரயில் முதல் வகுப்பிற்கான டிக்கெட் இருந்த போதிலும், உட்கார அனுமதி இல்லாமல் கீழே இறக்கி விடப்பட்டார். அந்தத் தருணத்திலிருந்து தான் தீண்டாமை என்னும் சமூக வேறுபாட்டிற்கு எதிராக போராட தொடங்கினார்.

இந்தியா வருகை: காந்தி தன்னுடைய 45 வயதில், 1915 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பினார். அப்போது இந்தியாவில் விவசாயிகள், ஊழியர்களுக்கு எதிரான சமூகப் பாகுபாடு மற்றும் அதிக வரி ஆகியவற்றை எதிர்த்து உரிமைகுரல் கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக 1921 ஆம் ஆண்டு தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். அப்போது அவர் முன் இருந்த ஆங்கிலேயர்கள் அடக்குமுறை, தீண்டாமை, ஜாதி, மதம், மொழிப் பிளவு, ஒடுக்கப்பட்ட பெண்கள், வன்முறைகள் இவற்றிலிருந்து விடுபட, ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் வேண்டும் என்ற நிலைப்பாட்டினை எடுத்தார். அதற்காக அவர் எடுத்த ஆயுதமே அகிம்சை. ஆயுதம் கொண்டு வன்முறையால் ஈடுபட்ட ஆங்கிலேயர்களை அமைதியாகவே இருந்து வெற்றி பெற்றவர் காந்தி. International Day of the Older Persons 2024: "முதுமையை மதிப்போம்.. முதியோர்களை அரவணைப்போம்" உலக முதியோர் தினம்.!

போராட்டங்கள்: 1920 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கியத்தினை நடத்தினார். இதன் மூலம் பிரிட்டிஷ் பொருட்கள் மற்றும் நிறுவனங்களை புறக்கணிக்க இந்தியர்களை வலியுறுத்தினார். அதேபோன்று 1930 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உப்பிற்கு விதிக்கப்பட்ட வரிகள் எதிராக சுமார் 240 மைல் நடந்தே சென்று உப்பு சத்தியாகிரகம் போராட்டத்தினை முன்னெடுத்தார். 1942 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேற செய்ய வெள்ளையனே வெளியேறு என்ற எதிர்ப்பு அறிவிப்பை வெளியிட்டார். இத்தனை சிறப்பு மிக்க காந்திக்கு ரவீந்திரநாத் தாகூர், மகாத்மா (Mahatma Gandhi) என்ற கௌரவத்தினை வழங்கினார்.

இறப்பு: சுதந்திர இந்தியாவில் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி காந்தி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் தியாகத்தையும் கொள்கைகளையும் போற்றும் விதமாக அவரை தேசத்தந்தை என்று அனைவரும் அழைக்கின்றனர். தேசத்தந்தை என்ற பட்டத்திற்கு சொந்தக்காரர், இந்திய ரூபாய் நோட்டுகளில் சிரிப்புடன் இருப்பவர், உலகையே அமைதியாள் வென்றவர், இப்படிப்பட்ட காந்தியின் சகாப்தத்திற்கு இந்திய வரலாற்றில் ஒரு மிகப்பெரிய இடம் என்றும் இருக்கும்.