டிசம்பர் 30, மலைக்கோட்டை (Namakkal News): நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை, ஆஞ்சநேயர் கோவில் (Namakkal Anjaneyar Temple) மிகவும் பிரசித்தி பெற்ற அனுமன் (Hanuman Temple) ஆலயங்களில் ஒன்றாகும். 18 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயர் இங்கு காட்சி தருகிறார். விஷ்ணுவின் அவதாரத்தில் ஒன்றான நரசிம்மர், அனுமார், லட்சுமி ஆகியோர் காட்சி தந்த இடமாகவும், பழமையான ஆஞ்சநேயர் கோவில்களில் ஒன்றாகவும் இக்கோவில் விளங்கி வருகிறது.
1,00,008 வடைமாலை அலங்காரம்:
கடந்த 1996 ஆம் ஆண்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 1000வது ஆண்டு சம்ப்ரோசன விழா நடைபெற்றது. தற்போது கோவில் நிர்வாகம் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இன்று அனுமன் ஜெயந்தி முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயர் தரிசனம் பெற்றனர். இன்று சிறப்பு தரிசனத்தை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு பிடித்த வடையில் மாலை கோர்த்து சிறப்பு அலங்காரம் காட்சிப்படுத்தப்பட்டது. அப்படியாக, மொத்தம் ஒரு லட்சத்து எட்டு வடை மாலை அலங்காரத்தில், இன்று ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்திருந்தார். New Year 2025: புத்தாண்டு அன்று தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள்; இனிய 2025 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மக்களே..!
நாமக்கல் ஆஞ்சநேயர் வரலாறு சிறுகுறிப்பு:
இலங்கை மன்னர், சிவபக்தன் இலங்கேஸ்வரனுக்கு எதிராக நடந்த போரில், ஸ்ரீ இராமரின் தம்பி லக்குவன் விஷத்தால் பாதிக்கப்படுகிறார். அவருக்கு மூலிகை எடுத்து வர ராமர் அனுமனை அனுப்பி வைக்க, மூலிகையை மறந்துபோனவர் மலையுடன் யுத்த களத்திற்கு வருகை தருகிறார். பின் மலையை அங்கேயே மீண்டும் கொண்டு சென்றபோது, மலையில் அமைந்த கிராமத்தில் இருந்த மக்களை, நாமக்கல் பகுதியில் அவர்களின் கிராமத்துடன் இறக்கி வைத்த தலமாகவும் இத்தலம் கூறப்படுகிறது. அதேபோல, பிரம்மனிடம் இருந்து வரம்பெற்ற மன்னர் ஹிரண்யகசிபு தேவர்களையும், மக்களையும் வாட்டி வதைக்க, அவரின் மகன் பிரகலாதன் ஸ்ரீ விஷ்ணுவின் நாமத்தை உச்சரித்து, பக்தரை காப்பாற்ற விஷ்ணு சிங்க முகம், மனித உடல் என நரசிம்மராக தோன்றி ஹிரண்யகசிபுவை மாளிகையின் நிலைவாசலில் நின்று கொன்றார். இதன்பின் ஸ்ரீ விஷ்ணுவின் மனைவி லட்சுமி இன்றைய நாமக்கல் பகுதியில் உள்ள மலையில் தவம் செய்ய, உள்ளூரில் ஆஞ்சநேயர் என அழைக்கப்பட்டவர் கொடுத்த சிலை வளர்ந்து நரசிம்மர் காட்சிதந்தார், அதனால் இங்கு மூன்று தெய்வங்களும் இருக்கும் திருத்தலம் உண்டாகியது என்ற கூற்றும் உள்ளது.
1,00,008 வடை மாலையுடன் அனுமன் பக்தர்களுக்கு காட்சி:
*1,00,008 வடைகளால் மாலை . _அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ,_ நாமக்கல் ஆஞ்சநேயர்* அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு , நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் 1,00,008 வடைகளால் மாலை . சிறப்பு அலங்காரத்தில் அதிகாலை முதல் pic.twitter.com/lhDxKSRPTF
— Tirupur Talks (@TirupurTalks) December 30, 2024
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று வெண்ணெய் அலங்காரம்:
நாமக்கல் ஆஞ்சநேயர் வெண்ணெய் அலங்காரத்தில் தரிசனம் #shorts #namakkal #anjaneyartemple #hanuman #Namakkal #namakkalanjaneyar #narasimmar #salakiramam #namagirithayar #hanuman #பக்தஆஞ்சநேயர் #அனுமன் #நாமக்கல் #சாளக்கிராமம் #நரசிம்மர் #ஆஞ்சனேயர் pic.twitter.com/7ICyu3Rjq8
— Dr Andal P Chockalingam (@Vastushastram) December 29, 2024