Crab Soup Recipe: காரசாரமான நண்டு சூப் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

சளி, இருமலுக்கு ஏற்ற நண்டு சூப் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Crab Soup (Photo Credit: YouTube)

நவம்பர் 16, சென்னை (Kitchen Tips): மழைக்காலங்களில் பெரும்பாலான நபர்களுக்கு சளி, இருமல் வந்துவிடும். இதனை சரிசெய்ய நாம் பல்வேறு சூப் ரெசிபிகளை செய்து பருகுவோம். அந்த வகையில், மழைக்காலங்களில் நண்டு (Crab) சூப் வைத்து, மிளகு சேர்த்து சாப்பிடும்போது, சளி, இருமல், நெஞ்சு சளி போன்ற சுவாச கோளாறுகளுக்கும் நிவாரணம் கிடைக்கிறது. முடிந்த அளவு வயல் நண்டு சூப் உடலுக்கு நல்ல பயனை அளிக்கும். கடல் மீன் உணவுகளில் சுவையான வகைகளில் நண்டு மிகவும் முக்கியமானது. கணுக் காலிகள் எனச் சொல்லப்படும் நண்டுகள், சிப்பி இனத்தைச் சேர்ந்தவை. நண்டுகளில் பல வகை உண்டு. பால் நண்டு, வலை நண்டு, வயல் நண்டு, டஞ்சன் நண்டு, நீல நிற நண்டு, சிவப்பு நிற நண்டு என உள்ளன. இவற்றைப் பல சுவைகளில் சமைக்கலாம். அந்தவகையில் வயல் நண்டு சூப் (Nandu Soup) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். Pudalangai Bajji Recipe: சுவையான புடலங்காய் பஜ்ஜி செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

நண்டு - 150 கிராம்

எண்ணெய் - 1 தேக்கரண்டி

கிராம்பு - 3

ஏலக்காய் - 2

இலவங்கப்பட்டை - 1

பச்சை மிளகாய் - 2

தக்காளி, வெங்காயம் - தலா 1

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

இஞ்சி பூண்டு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

மிளகு தூள் - அரை தேக்கரண்டி

உப்பு, தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை: