IPL Auction 2025 Live

Kalyana Veetu Milagu Rasam Recipe: சுவையான முறையில் கல்யாண வீட்டு மிளகு ரசம் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

அருமையான சுவையில் கல்யாண வீட்டு மிளகு ரசம் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Kalyana Veetu Milagu Rasam (Photo Credit: YouTube)

ஜூன் 27, சென்னை (Kitchen Tips): வீட்டில் தயாரிக்கப்பட்ட மூலிகை மற்றும் மசாலா கலவை மசாலா மற்றும் மிளகு சேர்த்து ஒரு முக்கிய மூலப்பொருளாக தயாரிக்கப்படுவது பாரம்பரிய ரசம் ஆகும். அந்தவகையில் கல்யாண வீட்டு மிளகு ரசம் (Kalyana Veetu Milagu Rasam) எப்படி செய்வது என்பதனை இதில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

சீரகம் - ஒன்றரை கரண்டி

மிளகு - 1 கரண்டி

காய்ந்த மிளகாய் - 2

பூண்டு - 10 பல்

பச்சை மிளகாய் - 3

பழுத்த தக்காளி - 2

புளி ஊற வைத்த கரைசல் - சிறிதளவு

வெந்தயம், சீரகம் - கால் கரண்டி

கருவேப்பிலை - 2 கொத்து

கொத்தமல்லி - சிறிதளவு

மஞ்சள் தூள் - கால் கரண்டி

பெருங்காயத்தூள் - கால் கரண்டி

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.  Traffic Awareness In Hyderabad: போக்குவரத்து விழிப்புணர்வு; வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்த வீடியோ வைரல்..!

செய்முறை:

முதலில் சீரகம், மிளகு, மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், பூண்டு மற்றும் பச்சை மிளகாயை இடித்து எடுத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர், அரைத்த மிளகு, சீரகம், மிளகாய் பொடி மற்றும் இடித்து வைத்துள்ள பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர், பொடியாக நறுக்கி பின் கையினால் நன்றாக பிசைந்து வைத்துள்ள தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து, 1கப் தண்ணீரில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், 2கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

இதனையடுத்து, ரசம் கொதிக்க ஆரம்பிக்கும்போது அடுப்பை அனைத்து விட்டு, அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து மூடி வைக்கவும். பிறகு, 10 நிமிடம் கழித்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான கல்யாண வீட்டு மிளகு ரசம் தயார்.