Pattarai karuvattu Oorugai Recipe: பழைய கஞ்சிக்கு ஏற்ற சைடிஷ்.. ருசியான பட்டறை கருவாட்டு ஊறுகாய் செய்வது எப்படி..?
பழைய கஞ்சிக்கு சிறந்த சைடிஷ் ஆக இருக்கக்கூடிய பட்டறை கருவாட்டு ஊறுகாய் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
ஜூலை 27, சென்னை (Kitchen Tips): கிராமப் புறங்களில் வீடுகளில் அதிகமாக கருவாட்டை வறுத்தும், அதனை குழம்பில் போட்டும் உணவாக சாப்பிடுவர். அந்தவகையில், பட்டறை (Dry Fish Pickle) கருவாட்டை கொண்டு மிகவும் ருசியான பட்டறை கருவாட்டு ஊறுகாய் (Pattarai Karuvattu Oorugai) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இதனை பழைய கஞ்சிக்கு சைடிஷ் ஆக சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
தக்காளி - அரை கிலோ
கடுகு - 50 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - 50 கிராம் (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 50 கிராம் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 கரண்டி
மிளகாய் தூள் - 100 கிராம்
கடலை எண்ணெய் - அரை லிட்டர்
உப்பு - தேவையான அளவு
வறுக்க:
கடுகு - 50 கிராம்
வெந்தயம் - 50 கிராம்
கருவாடு - கால் கிலோ
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
முதலில் சுடுதண்ணீர் வைத்து அதில் கருவாட்டை (Karuvadu) நன்கு ஊற வைத்துக்கொள்ளவும். அடுத்து தக்காளியை வேகவைத்து தோல் நீக்கி, அதனை மசித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே ஊற வைத்துள்ள கருவாட்டை எடுத்து, நல்ல தண்ணீரில் ஒரு முறை அலசி எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக கடுகு, வெந்தயம் ஆகியவற்றை வறுத்து எடுத்து, அதனை ஆற வைத்து, அரைத்துக் கொள்ளவும்.
கருவாட்டை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் கறிவேப்பிலை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின், மசித்து வைத்த தக்காளியை நன்கு வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். தாளிக்க, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, கறிவேப்பிலை, நறுக்கி வைத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் ஏற்கனவே வதக்கி வைத்த தக்காளி சேர்த்து, வறுத்து வைத்த கருவாட்டையும் சேர்க்க வேண்டும். மேலும், அதில் வினிகர், அரைத்து வைத்த கடுகு வெந்தையம் ஆகியவற்றையும் சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும்.
இப்போது, இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் கொட்டி வைக்க வேண்டும். சுமார் 6 மாதம் கெட்டு போகாமல் இருக்கும், மிகவும் ருசியான பட்டறை கருவாட்டு ஊறுகாய் ரெடி.