Egg Paniyaram Recipe: மாலை நேரத்திற்கு ஏற்ற சுவையான ஸ்நாக்ஸ்.. முட்டை பணியாரம் செய்வது எப்படி..?
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் முட்டை பணியாரம் சுவையாக எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
டிசம்பர் 30, சென்னை (Kitchen Tips): மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்தமான பல்வேறு ரெசிபிகள் செய்து சாப்பிட்டிருப்போம். அந்தவகையில், முட்டையில் செய்யக்கூடிய பணியாரம் ரெசிபி மிக சுவையாகவும், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கும். மிகவும் சுலபமான முறையில் எப்படி முட்டை பணியாரம் (Muttai Paniyaram) செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். Paneer Podimas Recipe: சுவையாக பனீர் பொடிமாஸ் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 3 கப்
முட்டை - 2
பெரிய வெங்காயம் - 2
தக்காளி -1
பச்சை மிளகாய் - 2
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடலை எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் தோசை மாவுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியையும் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
- இதோடு கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சிறிதளவு மிளகு தூள் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளவும். தற்போது, முட்டை பணியாரத்திற்கான மாவு ரெடி.
- இதனையடுத்து பணியாரக்கல்லை சூடேற்றி விட்டு கலந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கொள்ளவும். சுவையை அதிகரிக்க வேண்டும் என்றால் எண்ணெய்க்குப் பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
- இப்படி பணியாரத்தைக் கருகவிடாமல் மிதமான சூட்டில் வைத்து இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான முட்டை பணியாரம் ரெடி. இதற்கு தேங்காய் சட்னி அல்லது கார சட்னி வைத்து தொட்டு சாப்பிடலாம்.