Hotel Style Poori Kizhangu Recipe: ஹோட்டல் ஸ்டைலில் பூரி கிழங்கு மசாலா செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
குழந்தைகளுக்கு பிடித்தமான ஹோட்டல் ஸ்டைலில் பூரி கிழங்கு மசாலா எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காண்போம்.
ஜூலை 26, சென்னை (Kitchen Tips): பூரி கிழங்கு மசாலா என்றால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். அந்த வகையில் வீட்டில் அருமையான சுவையில் உருளை கிழங்கை கொண்டு செய்யப்படும் இந்த மசாலா பூரிக்கு ஒரு சூப்பர் சைடு டிஷ் ஆகும். இதனை ஓட்டல் ஸ்டைலில் (Hotel Style Poori Kizhangu) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - அரை கிலோ
பெரிய வெங்காயம், தக்காளி - தலா 2
மஞ்சள் தூள், சுக்குத் தூள் - தலா 1 தேக்கரண்டி
மல்லி விதை - 1 கரண்டி
சீரகம், ஓமம் - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரை கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு. Weekend Special: குக்கரில் குழையாமல் ஈஸியா காளான் பிரியாணி செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சிக்கலாம்!
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்குகளை வேக வைத்து, தோலுரித்து மசித்து கொள்ளவும். பின் கொத்தமல்லி விதை, சீரகம், ஓமம் இவை மூன்றையும் வெறும் பாத்திரத்தில் வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து வெங்காயம், தக்காளி இரண்டையும் தனித்தனியாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சீரகம், வரமிளகாய் கிள்ளிப் போட்டு தாளிக்க வேண்டும். பிறகு அரைத்த வெங்காய விழுதை பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
அதன் பின்னர் தக்காளி விழுதை சேர்த்து வேகவிட்டு, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சுக்கு தூள் பொடிகளையும் சேர்த்து வதக்கவும். மசித்த உருளைக்கிழங்கு மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும்.
மசாலா கிழங்கில் நன்கு கலந்ததும், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். வெந்து வரும்போது அதன் மேல் கொத்தமல்லி தழைகளை தூவிவிடவும். அவ்வளவுதான் சுவையான ஓட்டல் ஸ்டைல் பூரி கிழங்கு ரெடி.