Ragi Pakoda Recipe: குழந்தைகளுக்கு பிடித்தமான சத்தான ராகி பக்கோடா செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
சத்தான மொறுமொறுப்பான ராகி பக்கோடா எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
டிசம்பர் 14, சென்னை (Kitchen Tips): மாலை நேரத்தில் அதுவும் மழைக் காலங்களில் சூடாக மொறுமொறுப்பாக ஏதேனும் சாப்பிட வேண்டுமா? உடனே வீட்டில் ராகி மாவு இருந்தால், அதைக் கொண்டே எளிய முறையில் பக்கோடா செய்யலாம். பொதுவாக, ராகி உடலுக்கு மிகவும் நல்லது. ராகி ஈறுகளுக்கு நல்லது என்பதால், அடிக்கடி இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ஈறுகள் வலுவடையும். ராகி பக்கோடா (Ragi Pakoda) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். Aval Kesari Recipe: தித்திக்கும் அவல் கேசரி சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 1 கப்
வெங்காயம் - 1 கப்
வரமிளகாய் - 5
பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய வரமிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- பின், அதில் சிறிது நீர் ஊற்றி உதிரி உதிரியாக பிசைந்து கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவு.
- அடுத்து, அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை, எண்ணெயில் உதிர்த்து விட்டு பொரித்து எடுத்தால், சுவையான ராகி பக்கோடா ரெடி. சுலபமான முறையில் தயாரான சத்தான ராகி பக்கோடாவை அனைவரும் சாப்பிடலாம்.