IPL Auction 2025 Live

Tulasi Rasam Recipe: சளி, இருமலுக்கு அருமருந்தாக.. துளசி ரசம் செய்வது எப்படி..?

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட துளசி ரசம் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Tulasi Rasam (Photo Credit: YouTube)

ஆகஸ்ட் 10, சென்னை (Kitchen Tips): மழைக்காலம்  ஆரம்பித்துவிட்டால் குழந்தைகளுக்கு  அடிக்கடி சளி, இருமல், தொண்டை வலி ஏற்படும். எனவே, இவற்றில் இருந்து விடுபடவும், அவை வராமல் தடுக்கவும் துளசி (Holy Basil) ரசத்தை வாரம் ஒருமுறை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த துளசி ரசம் குழந்தைகளுக்கு நல்ல மருந்தாகும். துளசியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அவை சளி, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. அப்படிப்பட்ட துளசி ரசம் (Tulasi Rasam) எப்படி செய்வது என்பதை இதில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

துளசி - ஒரு கைப்பிடி அளவு

தக்காளி - 2

புளித்தண்ணீர், பருப்புத்தண்ணீர் - தலா 1 கப்

மஞ்சள் தூள், மிளகு, சீரகம் - தலா 1 கரண்டி

உப்பு - தேவையான அளவு. Kothamalli Sadam: உடலுக்கு சத்துக்களை வாரி வழங்கும் கொத்தமல்லி சாதம்.. சுவைபட செய்வது எப்படி?..!

தாளிக்க தேவையானவை:

நெய் - 1 கரண்டி

பெருங்காயம் - 1 சிட்டிகை

கடுகு - 1 கரண்டி

செய்முறை:

முதலில் தக்காளியை நறுக்கி, அதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து புளித் தண்ணீரை நன்கு கொதிக்க விட வேண்டும்.

தக்காளி வெந்து பச்சை வாசனை போனதும், அதில் பருப்பு தண்ணீரை சேர்க்கவும்.

அடுத்து மிளகு, சீரகத்தைப் பொடித்துப் போட்டு 1 கொதிவிட்டு இறக்க வேண்டும்.

இதனை ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி தாளிக்கவும். கடைசியில் துளசியைப் போட்டு உடனே ரசத்தை மூடிவிடவும்.

அவ்வளவுதான் துளசி ரசம் தயார். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான அருமருந்தாகும்.